வீடு / சமையல் குறிப்பு / Munthirikothu / Green gram paniyaram

Photo of Munthirikothu / Green gram paniyaram by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
801
4
5.0(0)
0

Munthirikothu / Green gram paniyaram

Dec-23-2018
Wajithajasmine Raja mohamed sait
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சைப்பயறு - 1 கப்
  2. வெல்லம் -1/2 கப்
  3. தேங்காய் துருவல் - 1/2 கப்
  4. எள் -1 தேக்கரண்டி
  5. ஏலக்காய் -2
  6. நெய் -1 தேக்கரண்டி
  7. அரிசி மாவு -1/4 கப்
  8. மைதா -1 தேக்கரண்டி
  9. மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
  10. உப்பு - சிறிதளவு
  11. எண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்:
  2. அடுப்பில் கடாயை வைத்து பாசிப்பயறை நன்கு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
  3. வறுத்த பாசிப்பயறு நன்கு ஆறியவுடன் 2 ஏலக்காய் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
  4. மிக்சியில் அரைக்கும் பொழுது கொரப்பாக இல்லாமல் ,பவுடர் போலவும் இல்லாமல் அரைத்துக்கொள்ளவும்.
  5. ஒரு கடாயில் பொடித்த வெல்லம் ,1/2 கப் தண்ணீர் சேர்த்து பாகு ஒரு கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்.பின்பு அதை வடிகட்டி வைக்கவும்.
  6. எள்ளை கடாயில் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
  7. துருவிய தேங்காயையும் கடாயில் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
  8. ஒரு பாத்திரத்தில் பொடித்த பச்சைபயறு மாவு,வறுத்த எள்,தேங்காய் துருவல்,வெல்லப்பாகு சேர்க்கவும்.
  9. வெல்லப்பாகு சேர்ந்தவுடன் நன்கு பிசைந்து கொள்ளவும்.
  10. இறுதியாக 1 தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  11. பின்பு மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். முந்திரிக்கொத்து செய்ய உள் பூரணம் தயார்.
  12. வெளி கோட்டிங் செய்ய 1/4 கப் அரிசிமாவு,1 தேக்கரண்டி மைதாமாவு ,1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்,சிறிதளவு உப்பு ,சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.
  13. தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  14. இப்பொழுது உருட்டிவைத்த உருண்டைகளை மாவில் கோட் செய்து கொள்ளவும்.
  15. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கோட் செய்த உருண்டைகளை இரண்டு மூன்றாக சேர்த்து பொரித்துக்கொள்ளவும்.
  16. இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் அடுப்பில் இருந்து எடுக்கவும்.
  17. சுவையான ஆரோக்கியமான முந்திரிக்கொத்து தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்