வீடு / சமையல் குறிப்பு / நவரத்தின பருப்பு மற்றும் பயிர் மசாலா இட்லி

Photo of Navaratna Dal and Lentils Massla idlies by Jayanthy Asokan at BetterButter
159
1
0(0)
0

நவரத்தின பருப்பு மற்றும் பயிர் மசாலா இட்லி

Dec-24-2018
Jayanthy Asokan
420 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நவரத்தின பருப்பு மற்றும் பயிர் மசாலா இட்லி செய்முறை பற்றி

ஒன்பது வகையான பருப்பு ,பயிறு மற்றும் சிறிதளவு அரிசி கொண்டு செய்யப்படும் இட்லி மசாலா இட்லி ஆகும்

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • తేలికైనవి
 • ప్రతి రోజు
 • తమిళనాడు
 • మిళితం
 • ఆవిరికి
 • మితముగా వేయించుట
 • అల్పాహారం మరియు బ్రంచ్
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. துவரம்பருப்பு 1 கைப்பிடி
 2. கடலை பருப்பு 1 கைப்பிடி
 3. மசூர் பருப்பு 1 கைப்பிடி
 4. முழு உளுந்து 1 கைப்பிடி
 5. பாசிப்பருப்பு 1 கைப்பிடி
 6. கருப்பு கொண்டை கடலை 1 கைப்பிடி
 7. வெள்ளை பட்டாணி 1 கைப்பிடி
 8. பட்டாணி பருப்பு 1 கைப்பிடி
 9. பச்சைப்பயிறு 1 கைப்பிடி
 10. அரிசி 1/2 கப்
 11. பச்சை மிளகாய் 4
 12. சீரகம் 1 தேக்கரண்டி
 13. எண்ணெய் 1 தேக்கரண்டி
 14. பெரிய வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
 15. தக்காளி 1
 16. கறிவேப்பிலை 2 கொத்து
 17. கரம் மசாலா தூள் 1/4 தேக்கரண்டி
 18. உப்பு தேவைக்கேற்ப
 19. கறி மசாலா தூள் 1/4 தேக்கரண்டி

வழிமுறைகள்

 1. அனைத்து பருப்பு மற்றும் பயறு வகைகளை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவேண்டும் .தனி பாத்திரத்தில் அரிசி மற்றும் உளுந்தை தனியே வைக்க வேண்டும்
 2. அரிசி மற்றும் உளுந்தை தனியாக ஊற வைக்க வேண்டும்
 3. நன்கு ஊறிய பருப்பு,பயிர் மற்றும், அரிசியை சிறிது சீரகம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
 4. அரைத்த மாவை உப்பு சேர்த்து 4 முதல் 6 மணி நேரம் வரை புளிக்க வைக்க வேண்டும்.
 5. புளித்த மாவை இட்லி தட்டில் எண்ணெய் தடவி இட்லி வார்க்க வேண்டும்.
 6. 15 முதல் 18 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும்
 7. வெந்த இட்லி பூ போல் மலர்ந்திருக்க வேண்டும்
 8. வெந்தத இட்லியை சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்
 9. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு மற்றும் வெங்காயம், தக்காளி,கறிவேப்பிலையை தாளித்து ,துண்டங்களாக்கிய இட்லியை சேர்க்க வேண்டும்.
 10. வெங்காய தக்காளி கலவை நன்கு இட்லியுடன் கலந்தபின் மசாலா பொடிகளை அதனுள் சேர்த்து தேவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கலக்கவும்.
 11. இதுவே நவரத்தின பருப்பு பயிர் மசாலா இட்லி ஆகும்.
 12. நவரத்தின பருப்பு பயறு மசாலா இட்லி தனித்தோ அல்லது பொடி மற்றும் சாஸுடன் உண்ணலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்