வீடு / சமையல் குறிப்பு / மட்டன் தால்ச்சா

Photo of Mutton Dalcha by Sumaiya shafi at BetterButter
393
0
0.0(0)
0

மட்டன் தால்ச்சா

Dec-24-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

மட்டன் தால்ச்சா செய்முறை பற்றி

மட்டன் தால்ச்சா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மட்டன் 300 கிராம்
  2. துவரம் பருப்பு அரை கப்
  3. சிறு பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
  4. கடலைப்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
  5. தக்காளி-3
  6. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  7. கருவேப்பிலை சிறிதளவு
  8. புதினா சிறிதளவு
  9. மல்லி இலை சிறிதளவு
  10. பட்டை ஒரு துண்டு
  11. லவங்கம் 3
  12. ஏலக்காய்-2
  13. பிரிஞ்சி இலை இரண்டு
  14. பச்சைமிளகாய்-2
  15. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  16. கத்திரிக்காய் 2
  17. முருங்கைக்காய் 1
  18. மாங்காய் ஒன்று சிறியது
  19. உருளைக்கிழங்கு ஒன்று
  20. சிவப்பு மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  21. குழம்பு மிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  22. மஞ்சள் தூள்-2 டீஸ்பூன்
  23. உப்பு தேவையான அளவு
  24. புளி தண்ணீர் அரை கப்
  25. எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
  26. நெய் ஒரு டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, சிறு பருப்பு,தக்காளி மற்றும் மட்டன் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  2. பின் வேறு ஒரு குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து ஊற்றவும்
  3. அதில் பட்டை, லவங்கம் ஏலக்காய், கருவேப்பிலை,புதினா,பிரிஞ்சி இலை சேர்க்கவும்.
  4. பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி காய்கறிகளை அதில் சேர்க்கவும்
  6. அதில் சிவப்பு மிளகாய் தூள்,உப்பு மற்றும் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து 2 whistles போடவும்.
  7. காய்கறிகள் வெந்த பின் வேக வைத்த மட்டனை சேர்க்கவும்
  8. பின் பருப்பை கடைந்து அதில் ஊற்றி கொதிக்க விட வேண்டும்
  9. இடையில் புளித் தண்ணீரை அதில் சேர்த்து கொதிக்க விட வேண்டும்
  10. கடைசியில் மல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்