Photo of Ukkarai by sudha rani at BetterButter
293
0
0.0(0)
0

உக்காரை

Dec-24-2018
sudha rani
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

உக்காரை செய்முறை பற்றி

புரோட்டின் சத்து நிறைந்த மற்றும் அதிக நெய் இல்லாத ஒரு ஆரோக்கியமான நெய்வேத்தியம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாசிப்பருப்பு 150 கிராம்
  2. கடலைப்பருப்பு 150 கிராம்
  3. தேங்காய் ஒரு முழு காய்
  4. வெல்லம் 400 கிராம்
  5. நெய் 4 டேபிள்ஸ்பூன்
  6. முந்திரி பொடி 1/4 கப்
  7. ஏலக்காய்த்தூள் 1 ஸ்பூன்
  8. சுக்கு தூள் 1/2 ஸ்பூன்
  9. ஜாதிக்காய் பொடி 2 சிட்டிகை
  10. உப்பு 1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பு மற்றும் பாசிப்பருப்பை சுமார் ஒரு இரண்டு மணி நேரம் வரை ஊறவிடவும்
  2. பின் 2 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் தண்ணீர் வடிகட்டிய பருப்பை சேர்த்து நன்கு மணம் வரும் வரை வறுக்கவும்
  3. பின் கொதிக்கும் நீரில் போட்டு முக்கால் பாகம் வெந்ததும் (கிள்ளு பதம்) இறக்கி தட்டில் கொட்டி ஆறவிடவும்
  4. பின் மிக்ஸியில் போட்டு கரகரப்பாக பொடிக்கவும்
  5. பின் வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி வைக்கவும்
  6. பின் வாணலியில் மீதமுள்ள நெய்யை ஊற்றி சூடானதும் வெல்ல கரைசல் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
  7. நன்கு கொதித்து நுரைத்து இளம் பாகு எடுக்கவும்
  8. பின் பொடித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து நன்கு வதக்கவும்
  9. கூடவே தேங்காய் துருவல் முந்திரி பொடி சேர்த்து நன்கு கிளறவும்
  10. பின் நன்கு சேர்ந்து வரும் போது ஏலக்காய்த்தூள் ஜாதிக்காய் பொடி சுக்கு தூள் சேர்த்து நன்கு கிளறவும்
  11. நன்கு திரண்டு வரும் போது இறக்கவும்
  12. சுவையான ஆரோக்கியமான உக்காரை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்