வீடு / சமையல் குறிப்பு / மிக்ஸடு தால் போண்டா

Photo of Mixed dal bonda by Krishnasamy Vidya Valli at BetterButter
329
0
0.0(0)
0

மிக்ஸடு தால் போண்டா

Dec-25-2018
Krishnasamy Vidya Valli
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மிக்ஸடு தால் போண்டா செய்முறை பற்றி

காய்கறியிலேயே போண்டா செய்து போர் அடிக்கும் போது இந்த மிக்ஸடு டால் போண்டா செய்து பாருங்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொண்டைக்கடலை ராஜ்மா மொச்சை பச்ச பயறு தட்டப்பயறு எல்லாம் சேர்த்து 1/4 கப்
  2. உப்பு 1/4 தேக்கரண்டி
  3. காரப்பொடி 1/2 தேக்கரண்டி
  4. பெருங்காயம் 1/8 தேக்கரண்டி
  5. தனியா பொடி சீரகப் பொடி மிளகு பொடி கரம் மசாலா பொடி ஆம்சூர் பொடி தலா கால் தேக்கரண்டி
  6. கருவேப்பிலை கொத்தமல்லி சிறிது
  7. மேல் மாவிற்கு தேவையானவை
  8. கடலை மாவு கால் கப்
  9. அரிசி மாவு 2 தேக்கரண்டி
  10. உப்பு 1/8 தேக்கரண்டி + 2 சிட்டிகை
  11. காரப்பொடி 1/4 தேக்கரண்டி
  12. பெருங்காயம் 2 சிட்டிகை
  13. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. பயறு மற்றும் கடலைகளை தேவையான அளவு தண்ணீர் விட்டு ஊற வைத்து அளவாக தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைத்து எடுக்கவும்
  2. வேகவைத்ததை உப்பு மற்றும் எல்லா பொடிகளையும் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்
  3. அரைத்ததுடன் கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து சிறு சிறு உருண்டையாக உருட்டி வைக்கவும்
  4. மேல் மாவிற்கு கொடுக்கப்பட்டவற்றை தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருண்டையை மேல் மாவில் தோய்த்து போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  6. சூடாக சட்னியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்