வீடு / சமையல் குறிப்பு / அவரைக்காய் பருப்பு உசிலி

Photo of Avaraikai paruppu osili by Krishnasamy Vidya Valli at BetterButter
367
0
0.0(0)
0

அவரைக்காய் பருப்பு உசிலி

Dec-25-2018
Krishnasamy Vidya Valli
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அவரைக்காய் பருப்பு உசிலி செய்முறை பற்றி

எளிதில் செய்யலாம் ஆரோக்கியமான இந்த கறிவகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நறுக்கிய அவரைக்காய் ஒன்றரை கப்
  2. உப்பு அரை தேக்கரண்டி
  3. மஞ்சள் பொடி 2 சிட்டிகை
  4. தேங்காய் துருவல் 1/8 கப்
  5. துவரம்பருப்பு கடலைப்பருப்பு தலா 1/8 கப்
  6. பச்சை மிளகாய் ஒன்று
  7. மிளகாய் வத்தல் 1
  8. உப்பு கால் தேக்கரண்டி
  9. பெருங்காயம் 1/8 தேக்கரண்டி
  10. எண்ணெய் மூன்று தேக்கரண்டி
  11. கருவேப்பிலை சிறிது
  12. தாளிக்க
  13. எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  14. கடுகு உளுத்தம்பருப்பு தலா அரை தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. அவரைக்காயை நறுக்கி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து குழையாமல் வேக வைத்து எடுக்கவும்
  2. பருப்பு பச்சை மிளகாய் மிளகாய் வத்தலை அரைமணிநேரம் ஊறவைத்து மிக்ஸியில் உப்பு பெருங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை மற்றும் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்
  4. பருப்பு நன்றாக உதிர் உதிராக வந்தவுடன் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்
  5. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து அவரைக்காய் சேர்த்து வதக்கவும்
  6. அவரைக்காய் வதங்கியதும் ஏற்கனவே செய்து வைத்த பருப்பு உசிலி சேர்த்து கிளறி இறக்கவும்
  7. சூடாகப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்