வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு ரசம்

Photo of Horse gram rasam by Krishnasamy Vidya Valli at BetterButter
361
0
0.0(0)
0

கொள்ளு ரசம்

Dec-25-2018
Krishnasamy Vidya Valli
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு ரசம் செய்முறை பற்றி

உடல் எடை குறைப்பிற்கு ஏற்றது கொள்ளு. அதை வைத்து செய்யும் எளிமையான ரசம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கொள்ளு 1/8 கப்
  2. மிளகாய் வத்தல் 2
  3. கொத்தமல்லி விதை 2 தேக்கரண்டி
  4. மிளகு 1/4 தேக்கரண்டி
  5. சீரகம் 1/2 தேக்கரண்டி
  6. கொத்தமல்லி இலை சிறிது
  7. தக்காளி 1 அல்லது 2
  8. மஞ்சள் பொடி 2 சிட்டிகை
  9. கட்டி பெருங்காயம் ஒரு சிறிய துண்டு
  10. உப்பு 1/2 தேக்கரண்டி
  11. எலுமிச்சை சாறு 3/4 தேக்கரண்டி
  12. தாளிக்க
  13. நெய் 1 /2 தேக்கரண்டி
  14. கடுகு 1/2 தேக்கரண்டி
  15. மிளகு சீரகம் ஒன்று இரண்டாக தட்டியது 1/2 தேக்கரண்டி
  16. கருவேப்பிலை சிறிது
  17. பெருங்காயம் 2 சிட்டிகை
  18. மிளகாய் வற்றல் 1

வழிமுறைகள்

  1. கொள்ளை தண்ணீர் விட்டு ஊற வைத்து குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. வேகவைத்த கொள்ளுடன் மிளகாய் வத்தல் கொத்தமல்லி விதை சீரகம் மிளகு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்
  3. தக்காளி உப்பு மஞ்சள் பொடி பெருங்காயம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  4. அரைத்த விழுது சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்
  5. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்க்கவும். எலுமிச்சை சாறு கலந்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்