வீடு / சமையல் குறிப்பு / கேரட் முருங்கைக்காய் சாம்பார்

Photo of Carrot,  drumstick sambar by Wahida Abdul Hameed at BetterButter
828
0
5.0(0)
0

கேரட் முருங்கைக்காய் சாம்பார்

Dec-25-2018
Wahida Abdul Hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கேரட் முருங்கைக்காய் சாம்பார் செய்முறை பற்றி

எல்லோருக்கும் பிடித்த குழம்பு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. துவரம்பருப்பு ஒரு கப்
  2. வெங்காயம் ஒன்று
  3. தக்காளி-3
  4. புளி ஒரு எலுமிச்சை அளவு
  5. வெல்லம் சிறிதளவு
  6. கேரட் 3
  7. முருங்கைக்காய் 2
  8. கத்திரிக்காய் 2
  9. சாம்பார் பொடி 2 ஸ்பூன்
  10. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  11. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  12. தனியா தூள் 2 ஸ்பூன்
  13. பெருங்காயம் சிறிதளவு
  14. உப்பு தேவையான அளவு
  15. கடுகு ஒரு ஸ்பூன்
  16. சீரகம் ஒரு ஸ்பூன்
  17. உளுந்து ஒரு ஸ்பூன்
  18. காய்ந்த மிளகாய் 1
  19. பச்சை மிளகாய் ஒன்று
  20. கருவேப்பிலை ஒரு கொத்து
  21. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் துவரம்பருப்பை 3 விசில் விட்டு நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் தக்காளி போட்டு நன்றாக வதக்கவும். அதனுடன் நறுக்கிய கேரட் மற்றும் முருங்கைக்காய் சேர்த்து வதக்கி வெந்த துவரம் பருப்பை சேர்க்கவும்.
  3. அதனுடன் புளிக்கரைசல் சேர்த்து நன்றாக கிளறவும்.
  4. வேறொரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் உளுந்து கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக தாளிக்கவும், அதனுடன் சாம்பார் பொடி மஞ்சள் பொடி மிளகாய் பொடி தனியா தூள் சேர்த்து லேசாக கிளறி சாம்பார் கலவையுடன் சேர்க்கவும்.
  5. இதனுடன் சிறிது பெருங்காயம் மற்றும் வெல்லம் சேர்க்கவும். சுவையான கேரட் முருங்கைக் காய், சாம்பார் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்