வீடு / சமையல் குறிப்பு / ஒன் பாட் திடீர் டிபன் சாம்பார் 10 நிமிடத்தில்

Photo of One Pot Thidir Tiffen Sambar In 10 minutes by Aishwarya Rangan at BetterButter
498
0
0.0(0)
0

ஒன் பாட் திடீர் டிபன் சாம்பார் 10 நிமிடத்தில்

Dec-25-2018
Aishwarya Rangan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஒன் பாட் திடீர் டிபன் சாம்பார் 10 நிமிடத்தில் செய்முறை பற்றி

காலை அவசர வேலையில் ஒன் பாட் டிபன் சாம்பார் பத்து நிமிடத்தில் செய்து நேரம் சேமித்து விடலாம். பாசிப்பருப்பு உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது

செய்முறை டாக்ஸ்

  • கைகுழந்தைகளுக்கான ரெசிப்பிகள்
  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாசி பருப்பு 1 கப்
  2. பெரிய வெங்காயம் 1
  3. பெரிய தக்காளி 1
  4. பச்சை மிளகாய் 2
  5. உப்பு தேவையான அளவு
  6. சிறிய காரட் 1
  7. சிறிய உருளை கிழங்கு 1
  8. கொத்தமல்லி
  9. குழம்பு மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  10. சாம்பார் பவுடர் 1/2 ஸ்பூன்
  11. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  12. கடுகு 1/4 ஸ்பூன்
  13. பெருங்காயம்
  14. கருவேப்பில்லை 5 இலை

வழிமுறைகள்

  1. பாசி பருப்பு 1 கப் எடுத்து ஐந்து நிமிடம் நன்றாக ஊற வைக்கவும்
  2. ஒரு தக்காளி ஒரு வெங்காயம் ஒரு பச்சை மிளகாய் ஒரு சிறிய கேரட் ஒரு சிறிய உருளை கிழங்கு எடுத்து கொள்ளவும்
  3. ஒரு குக்கரில் ஊற வைத்த பாசிப்பருப்பு சேர்த்து
  4. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நறுக்கி வைத்திருந்த அனைத்து பொருட்களையும் சேர்த்து கொள்ளவும்
  5. குழம்பு மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  6. சாம்பார் பொடி 1/2 ஸ்பூன் உப்பு தேவையான அளவு மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன் சேர்த்து கொள்ளவும்
  7. வாசனைக்காக மற்றும் பருப்பு நன்றாக பொலுபொலுவென வரவேண்டும் என்பதற்காக 1 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கொள்ளவும்
  8. குக்கர் மூடி விட்டு 4 விசில் விடவும்
  9. சாம்பார் கழிப்பதற்காக ஒரு ஸ்பூன் நல்லெண்ணை சேர்த்து கடுகு 1/4 ஸ்பூன், பெருங்காயம் கறிவேப்பிலை ஒரு மிளகாய் சேர்த்து கொள்ளவும்
  10. சாம்பார் ரெடி ஆனவுடன் தாளிப்பை சேர்த்து கொள்ளவும்
  11. இப்போது சுவையான ஈஸியான டிபன் சாம்பார் பத்து நிமிடத்தில் தயாராகிவிட்டது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்