Photo of Paav bajji by Fathima Beevi at BetterButter
291
0
0.0(0)
0

பாவ் பாஜி

Dec-25-2018
Fathima Beevi
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பாவ் பாஜி செய்முறை பற்றி

பாவ் பாஜி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பட்டாணி சுண்டல்- 1 கப்
  2. 1/4 டீ ஸ்பூன் மஞ்சள் தூள்
  3. 1 இன்ச் பட்டை
  4. 2 கிராம்பு
  5. 2 ஏலக்காய்
  6. 10 பூண்டுபற்கள்
  7. 2 துண்டு இஞ்சி
  8. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  9. சீரகம்-1/4 டீ ஸ்பூன்
  10. சோம்பு-1/4 டீ ஸ்பூன்
  11. சிறிது கருலேப்பில்லை
  12. நறுக்கிய வெங்காயம்-1
  13. தக்காளி-2
  14. 1/4 டீ ஸ்பூன் மஞ்சள் தூள்
  15. ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்
  16. 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள்
  17. 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள்
  18. தேவையான அளவு உப்பு
  19. சிறிது கொத்தமல்லி
  20. சிறிது புதினா
  21. உருளைக்கிழங்கு-2
  22. தேவையான அளவு தண்ணீர்

வழிமுறைகள்

  1. இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்த பட்டாணி சுண்டல்- 1 கப் நன்றாக கழுவி குக்கரில் சிறிது தண்ணீருடன் சேர்க்கவும். இதனுடன் 1/4 டீ ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும்
  2. ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்
  3. மிக்ஸி ஜாரில் 10 பூண்டுபற்கள், 2 துண்டு இஞ்சி, 1 இன்ச் பட்டை, 2 கிராம்பு, 2 ஏலக்காய் சேர்க்கவும்
  4. சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்
  5. குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடான பின் சீரகம்-1/4 டீ ஸ்பூன், சோம்பு-1/4 டீ ஸ்பூன் சேர்க்கவும்
  6. சிறிது கருலேப்பில்லை, நறுக்கிய வெங்காயம்-1, தக்காளி-2 சேர்த்து வதக்கவும்.
  7. பின்பு அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து வதக்கவும்
  8. விழுது நன்றாக வதங்கியதும் 1/4 டீ ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள், 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள், 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்
  9. மசாலாகளின் பச்சை வாசனை போகும் வரை வதக்கி சிறிது கொத்தமல்லி, சிறிது புதினா சேர்க்கவும்
  10. வேக வைத்த பட்டாணி சுண்டலை சேர்த்து கிளறவும்
  11. உருளைக்கிழங்கு-2 தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும்
  12. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மேலும் 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்
  13. பாவ் பாஜி பன்களை தோசை கல்லில் சிறிது பட்டர் தேய்த்து இரண்டு பக்கமும் சிறிது பொன்னிறம் ஆகும் வரை வைத்து எடுக்கவும்.
  14. பச்சை பட்டாணி மசாலா, பாவ் பாஜி பன்களை சிறிது நறுக்கிய வெங்காயத்தை தூவி, மற்றும் எலுமிச்சை பழச்சாறு பிழிந்து பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்