வீடு / சமையல் குறிப்பு / சுட்ட கத்தரிக்காய் கடலைப் பருப்பு துவையல்

Photo of Smoked Eggplant channa dal chutney by Fathima Beevi at BetterButter
736
0
0.0(0)
0

சுட்ட கத்தரிக்காய் கடலைப் பருப்பு துவையல்

Dec-25-2018
Fathima Beevi
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சுட்ட கத்தரிக்காய் கடலைப் பருப்பு துவையல் செய்முறை பற்றி

சுட்ட கத்தரிக்காய் கடலைப் பருப்பு துவையல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பெரிய கத்தரிக்காய்-1
  2. தக்காளி - 1
  3. கடலைப்பருப்பு-2 டேபிள் ஸ்பூன் 
  4. காய்ந்த சிகப்பு மிளகாய் - 4
  5. பூண்டுபற்கள் - 4
  6. இஞ்சி - 1/4 இன்ச்
  7. புளி - 1 சிறிய நெல்லிக்காய் அளவு
  8. நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
  9. பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
  10. மஞ்சள் தூள்-1/4 டீ ஸ்பூன்
  11. உப்பு- தேவையானஅளவு
  12. தண்ணீர்- அரைப்பதற்கு
  13. கரம் மசாலா தூள் - ஒரு சிட்டிகை
  14. தாளிக்க தேவையான பொருட்கள்:
  15. நறுக்கிய வெங்காயம்- 1 டேபிள் ஸ்பூன்
  16. கடுகு-1/4 டீ ஸ்பூன்
  17. எண்ணெய்-  2 டீ ஸ்பூன்
  18. கருலேப்பில்லை- ஒரு கொத்து

வழிமுறைகள்

  1. கத்தரிக்காயை நன்றாக கழுவி விட்டு அதன் மேல் எண்ணெய் தேய்த்து மிதமான சூட்டில் கத்திரிக்காயின் தோல் கருமை நிறம் ஆகும் வரை வாட்டி எடுக்கவும்.
  2. கத்தரிக்காய் நன்கு சுட்ட பின், தண்ணீரில் கழுவி, அதன் தோலை நீக்கி விட்டு நன்கு மசித்து கொள்ளவும்.
  3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வறுக்கவும்
  4. காய்ந்த மிளகாய் வற்றல், பூண்டு, இஞ்சி, புளி சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்
  5. சிறிது எண்ணெய் ஊற்றி சூடான பின் தக்காளி சேர்த்து வதக்கவும்
  6. பின்பு மஞ்சள் தூள், பெருங் காயத்தூள், கரம் மசாலா தூள், உப்பு  சேர்த்து வதக்கவும்.
  7. வறுத்த பருப்பை சிறிது நேரம் குளிர வைத்து அரைத்து எடுக்கவும்.  
  8. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, கருலேப்பில்லை சேர்க்கவும்
  9. பின்பு வெங்காயம் சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.
  10. மசித்து வைத்துள்ள கத்தரிக்காய், அரைத்து வைத்துள்ள பருப்பு விழுதை சேர்த்து 5 நிமிடம் மிதமான சூட்டில் வதக்கவும்.
  11. சுட்ட கத்தரிக்காய் கடலைப் பருப்பு துவையல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்