தால் ஸ்பெஷல்- கிராண்ட் ஃப்யூஷன் தாலி | Dal special - grand fusion thali in Tamil

எழுதியவர் Krishnasamy Vidya Valli  |  25th Dec 2018  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
 • Photo of Dal special - grand fusion thali by Krishnasamy Vidya Valli at BetterButter
தால் ஸ்பெஷல்- கிராண்ட் ஃப்யூஷன் தாலிKrishnasamy Vidya Valli
 • ஆயத்த நேரம்

  4

  மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  3

  மணிநேரம்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

1

1

தால் ஸ்பெஷல்- கிராண்ட் ஃப்யூஷன் தாலி recipe

தால் ஸ்பெஷல்- கிராண்ட் ஃப்யூஷன் தாலி தேவையான பொருட்கள் ( Ingredients to make Dal special - grand fusion thali in Tamil )

 • உளுந்து கீர் - தேவையானவை
 • உருட்டு உளுந்து 2 மேஜைக்கரண்டி
 • பால் ஒரு கப்
 • ஏலப் பொடி 2 சிட்டிகை
 • பனங்கல்கண்டு பொடித்தது 2 மேஜைக்கரண்டி
 • நெய் ஒரு தேக்கரண்டி
 • அலங்கரிக்க பாதாம் துருவல் இரண்டு தேக்கரண்டி
 • கோஸம்பரி தேவையானவை
 • பாசிப்பருப்பு இரண்டு மேஜைக்கரண்டி
 • கேரட் துருவல் தேங்காய் துருவல் வெள்ளரித் துருவல் தலா ஒரு தேக்கரண்டி
 • எலுமிச்சை சாறு அரை தேக்கரண்டி
 • உப்பு நான்கு சிட்டிகை
 • பெருங்காயம் ஒரு சிட்டிகை
 • பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்று
 • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிது
 • கடலை பருப்பு பச்சடி தேவையானவை
 • கடலைப்பருப்பு 2 மேஜைக்கரண்டி
 • வெல்லம் ஒன்றரை மேசைக்கரண்டி
 • உப்பு நான்கு சிட்டிகை
 • ஆம்சூர் பொடி 1/4 தேக்கரண்டி
 • மஞ்சள் பொடி 2 சிட்டிகை
 • காரப் பொடி 1/4 தேக்கரண்டி
 • தாளிக்க நெய் அரை தேக்கரண்டி கடுகு கால் தேக்கரண்டி மிளகாய் வத்தல் 1
 • ராஜ்மா சூப் தேவையானவை
 • ராஜ்மா 1/8 கப்
 • தக்காளி ஒன்று
 • மிளகுப் பொடி ஆம்சூர் பொடி காஷ்மீர் சில்லி பொடி, மஞ்சள் பொடி தனியா பொடி சீரகப் பொடி கரம்மசாலா உப்பு தலா கால் தேக்கரண்டி
 • தாளிக்க நெய் அல்லது வெண்ணெய் அரை தேக்கரண்டி பட்டை ஏலக்காய் கிராம்பு தலா ஒன்று
 • மொச்சை கத்திரிக்காய் துவரன் தேவையானவை
 • மொச்சை 1/4 கப்
 • கத்திரிக்காய் 1 பெரியது
 • உப்பு 1/4 தேக்கரண்டி+1/8 தேக்கரண்டி
 • மஞ்சள் பொடி 4 சிட்டிகை
 • அப்படியே அரைக்க: தேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி மிளகாய்வற்றல் 1 சீரகம் கால் தேக்கரண்டி
 • தாளிக்க தேங்காயெண்ணெய் அரை தேக்கரண்டி கடுகு உளுத்தம்பருப்பு தலா கால் தேக்கரண்டி கறிவேப்பிலை சிறிது
 • காராமணி/தட்ட பயறு சப்பாத்தி/பராத்தா தேவையானவை
 • காராமணி 1/8 கப்
 • கோதுமை மாவு 1/8 கப்
 • உப்பு 1/8 தேக்கரண்டி + 2 சிட்டிகை
 • பச்சை மிளகாய்1 இஞ்சி ஒரு சிறிய துண்டு கொத்தமல்லி இலை சிறிது
 • சப்பாத்தி வாட்டுவதற்கு தேவையான அளவு எண்ணெய் /நெய்
 • பச்சைப்பயிறு குடைமிளகாய் ஸ்டூ தேவையானவை
 • பச்ச பயறு குடைமிளகாய் நறுக்கியது தலா 1/8 கப்
 • தேங்காய் துருவல் அரை கப்
 • உப்பு 1/8 தேக்கரண்டி பச்ச மிளகாய் 1
 • தாளிக்க தேங்காயெண்ணெய் அரை தேக்கரண்டி சீரகம் கால் தேக்கரண்டி கறிவேப்பிலை சிறிது
 • குணுக்கு மோர் குழம்பு தேவையானவை
 • குணுக்கு செய்வதற்கு :உருட்டு உளுந்து 1/8 கப் ,பச்சரிசி ஒரு தேக்கரண்டி, பச்சை மிளகாய்1, உப்பு 1/8 தேக்கரண்டி, பெருங்காயம் 2 சிட்டிகை, மிளகு சீரகம் ஒன்று இரண்டாக தட்டியது 1/8 தேக்கரண்டி, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
 • அப்படியே அரைக்க தேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி அரிசி ஒரு தேக்கரண்டி பச்சை மிளகாய் 1 சீரகம் கால் தேக்கரண்டி
 • தயிர் 1/2 கப் உப்பு 1/8 தேக்கரண்டி
 • தாளிக்க தேங்காயெண்ணெய் அரை தேக்கரண்டி கடுகு உளுத்தம்பருப்பு தலா கால் தேக்கரண்டி மிளகாய் வத்தல் 1 கருவேப்பிலை சிறிது
 • கொண்டக்கடலை தீயல் தேவையானவை
 • கொண்டைக்கடலை கால் கப்
 • உப்பு 1/2 தேக்கரண்டி
 • புளி நெல்லிக்காய் அளவு
 • தக்காளி ஒன்று 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வதக்கவும்
 • வெல்லம் 2 சிட்டிகை மஞ்சள் பொடி 2 சிட்டிகை
 • வறுத்து அரைக்க தேங்காய் எண்ணெய் 1/4 தேக்கரண்டி தேங்காய் துருவல் ஒரு மேஜைக்கரண்டி கொத்தமல்லி விதை ஒரு தேக்கரண்டி மிளகாய் வத்தல் 2
 • தாளிக்க தேங்காயெண்ணெய் ஒரு தேக்கரண்டி கடுகு கால் தேக்கரண்டி கறிவேப்பிலை சிறிது
 • பருப்பு உருண்டை ரசம் தேவையானவை
 • துவரம்பருப்பு கடலைப்பருப்பு தலா 2 மேஜைக்கரண்டி
 • பச்சை மிளகாய் 1 மிளகாய் வத்தல் 1
 • உப்பு 1/8 தேக்கரண்டி, பெருங்காயம் 2 சிட்டிகை, எண்ணெய் 1 தேக்கரண்டி
 • தக்காளி ஒன்று
 • புளி பாதி நெல்லிக்காய் அளவு
 • உப்பு 1/8 தேக்கரண்டி வெல்லம் 2 சிட்டிகை மஞ்சள் பொடி 2 சிட்டிகை ரசப்பொடி 1/2 தேக்கரண்டி கட்டிப்பெருங்க்காயம் சிறிய துண்டு
 • கொத்தமல்லி இலை சிறிது
 • தாளிக்க : நெய் 1/2 தேக்கரண்டி, மிளகாய் வத்தல் 1, கடுகு 1/4 தேக்கரண்டி, மிளகு சீரகப்பொடி 4 சிட்டிகை கருவேப்பிலை சிறிது
 • பருப்பு பொடி டிரடீஷணல் -தேவையானவை
 • துவரம்பருப்பு பாசிப்பருப்பு தலா ஒரு மேஜைக்கரண்டி
 • மிளகாய் வற்றல் 1
 • மிளகு சீரகம் தலா 1/8 தேக்கரண்டி
 • உப்பு 1/8 தேக்கரண்டி
 • பெருங்காயம் 2 சிட்டிகை
 • ராஜ்மா காலிபிளவர் சப்ஜி தேவையானவை
 • ராஜ்மா காலிபிளவர் தலா 1/8 கப்
 • உப்பு தனியாபொடி சீரகப் பொடி மிளகு பொடி கரம் மசாலா மஞ்சள் தூள் ஆம்சூர் பொடி தலா 1/8 தேக்கரண்டி
 • காஷ்மீர் சில்லி பவுடர் 1/4 தேக்கரண்டி
 • கொத்தமல்லி சிறிது
 • தாளிக்க: எண்ணெய் 1 தேக்கரண்டி சீரகம் 1/4 தேக்கரண்டி
 • கொள்ளு பாலக் கிரேவி தேவையானவை
 • கொள்ளு 1/8 கப்
 • பாலக்கீரை பொடியாக நறுக்கியது 1/4 கப்
 • மஞ்சள் பொடி 2 சிட்டிகை உப்பு 1/8 தேக்கரண்டி பச்சை மிளகாய் 1 இஞ்சி ஒரு சிறிய துண்டு
 • கரம் மசாலா ஆம்சூர் பொடி காஷ்மீரி சில்லி பொடி தனியா பொடி சீரகப் பொடி மிளகு பொடி பெருங்காயம் தலா 1/8 தேக்கரண்டி
 • கொத்தமல்லி இலை சிறிது
 • தாளிக்க வெண்ணை அல்லது நெய் ஒரு தேக்கரண்டி சீரகம் அரை தேக்கரண்டி
 • ராஜ்மா மசாலா பாத் தேவையானவை
 • ராஜ்மா 1/8 கப்
 • பாஸ்மதி அரிசி 1/4 கப்
 • தக்காளி 1 பொடியாக நறுக்கிய குடை மிளகாய் 2 மேஜைக்கரண்டி
 • வறுத்து பொடி செய்ய கொத்தமல்லி விதை 1 தேக்கரண்டி காஷ்மீர் சில்லி 2 மிளகு சீரகம் தலா 1/8 தேக்கரண்டி, கஸூரி மேத்தி 1 தேக்கரண்டி, முந்திரி 3 முதல் 6, பட்டை ஏலக்காய் கிராம்பு தலா 1 எண்ணெய் 2 சொட்டுகள்
 • தாளிக்க: நெய் அல்லது வெண்ணெய் 1 தேக்கரண்டி சீரகம் 1/2 தேக்கரண்டி, பட்டை ஏலக்காய் கிராம்பு தலா 1
 • பச்ச பயறு பூரண அப்பம் தேவையானவை
 • பச்ச பயறு வெல்லம் தலா 1/8 கப்
 • ஏலப்பொடி 2 சிட்டிகை நெய் 1 தேக்கரண்டி
 • தேங்காய் துருவல் 2 தேக்கரண்டி
 • மேல் மாவிற்கு: உருட்டு உளுந்து 1/8 கப், பச்சரிசி 1 தேக்கரண்டி உப்பு 1 சிட்டிகை
 • பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
 • காராமணி குடைமிளகாய் வடை தேவையானவை
 • காராமணி 1/8 கப்
 • பொடியாக நறுக்கிய குடை மிளகாய் ஒரு மேசைக்கரண்டி
 • பச்சை மிளகாய் 1/2 மிளகாய் வற்றல் 1/2 உப்பு 1/8 தேக்கரண்டி பெருங்காயம் 2 சிட்டிகை கருவேப்பிலை கொத்தமல்லி சிறிது
 • பொரிப்பதற்கு தேவையான அளவு
 • உளுந்து ஈரப்பப்படம் தேவையானவை
 • உருட்டு உளுந்து கால் கப்
 • உப்பு 1/8 தேக்கரண்டி சீரகம் அரை தேக்கரண்டி பெருங்காயம் 2 சிட்டிகை தேங்காய் எண்ணெய் அரை தேக்கரண்டி பப்படகாரம் 1 சிட்டிகை.
 • கொண்டக்கடலை மாங்காய் ஊறுகாய் தேவையானவை
 • கொண்டகடலை , பொடியாக நறுக்கிய மாங்காய் தலா 1/8 கப்
 • உப்பு 1/2 தேக்கரண்டி
 • தாளிக்க: நல்லெண்ணெய் 3 தேக்கரண்டி கடுகு 1/8 தேக்கரண்டி பெருங்காயம் 2 சிட்டிகை, மஞ்சள் பொடி 3 சிட்டிகை வெந்தயப்பொடி 1/8 தேக்கரண்டி சில்லி பிளேக்ஸ் 1 தேக்கரண்டி
 • சாதம் தனியாக வைக்க : பாஸ்மதி அரிசி 11/4 கப்
 • நெய் தனியாக 2 தேக்கரண்டி
 • தயிர் தனியாக 1 கப்

தால் ஸ்பெஷல்- கிராண்ட் ஃப்யூஷன் தாலி செய்வது எப்படி | How to make Dal special - grand fusion thali in Tamil

 1. உளுந்து கீர் , பப்படம், பருப்பு பொடி தவிர மற்ற தேவையான பருப்பு பயறை ஊறவைக்கவும். காராமணி (வடைக்கு தேவையானது தவிர), பச்ச பயறு, கொண்டகடலை (ஊறுகாய்க்குள்ள கடலை தவிர) , ராஜ்மா, மொச்சை கொள்ளு, பச்சடிக்கான கடலைப்பருப்பு குக்கரில் வேகவைத்து எடுக்கவும்.
 2. பாஸ்மதி அரிசியை (தனியாக கொடுத்த பாஸ்மதி அரிசி மற்றும் ராஜ்மா மசாலா பாத்திற்கு கொடுத்த அரிசியும் சேர்த்து) களைந்து ஊறவைத்து அளவாக தண்ணீர் விட்டு வேகவைத்து எடுக்கவும்
 3. பருப்புப்பொடிக்கு கொடுத்தவற்றைவெறும் கடாயில் வறுத்து உப்பு சேர்த்து திரித்துக்கொள்ளவும்
 4. தீயலுக்கு வறுக்க கொடுத்தவற்றை வறுத்துக்கொள்ளவும்
 5. ராஜ்மா மசாலா பாத்தில் வறுக்க கொடுத்தவற்றை வறுத்து பொடி செய்து கொள்ளவும்
 6. தக்காளியை வதக்கி தீயலுக்கு வறுத்ததுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்
 7. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து புளிகரைத்து விட்டு உப்பு மஞ்சள் பொடி வெல்லம் அரைத்த விழுது வேகவைத்த கொண்டகடலை சேர்த்து நன்றாக கொதிவிட்டு கெட்டியானதும் இறக்கினால் கொண்டகடலை தீயல் தயார்
 8. பப்படத்திற்கு கொடுத்த உளுந்தை மிக்ஸியில் திரித்து அரிப்பில் அரித்துக்கொள்ளவும்
 9. அதோடு கொடுக்கப்பட்ட மற்ற பொருட்களையும் தண்ணீர் சேர்த்து மாவு போல் பிசைந்து சப்பாத்தியாக இட்டு கொள்ளவும். வெயிலில் காயவைக்க வேண்டாம். தாலி அரேஞ்ச் செய்யும் முன் இந்த அப்பளத்தை பொரிக்கவோ தணலில் சுடவோ அல்லது மைக்ரோவேவ் அவனில் 30 வினாடிகள் வைத்து எடுத்தால் அப்பளம் தயார்.
 10. பருப்பு உருண்டை ரசத்தில் அரைக்க கொடுத்தவற்றை ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும்
 11. அரைத்த விழுதை உருண்டையாக உருட்டி ஆவியில் பத்து நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்
 12. புளியை கரைத்து விட்டு தக்காளி உப்பு மஞ்சள் பொடி பெருங்காயம் சேர்த்து கொதிக்கவிட்டு வேகவைத்த பருப்பு உருண்டையை சேர்த்து நுரைத்து வரும்போது இறக்கி தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்த்து கொத்தமல்லி இலையை தூவினால் பருப்பு உருண்டை ரசம் தயார்
 13. சப்பாத்திக்கு கொடுத்த காராமணியை ஊறவைத்து வேகவைத்து எடுத்து அதோடு பச்ச மிளகாய் உப்பு பெருங்காயம் சேர்த்து அரைக்கவும்
 14. அரைத்ததுடன் கோதுமைமாவு கொத்தமல்லி இலை சேர்த்து பிசைந்து சப்பாத்தியாக இட்டு தோசைகல்லில் எண்ணெய் அல்லது நெய் விட்டு வாட்டி எடுக்கவும். காராமணி சப்பாத்தி/பராத்தா தயார்
 15. காராமணி/தட்டபயறு வடைக்கு ஊறவைத்ததை பச்ச மிளகாய் மிளகாய் வத்தல் உப்பு பெருங்காயம் சேர்த்து கரகரப்பாக தண்ணீர் விடாமல் அரைக்கவும்
 16. அதோடு நறுக்கிய குடைமிளகாய் கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து கலந்து வடையாக தட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். காராமணி குடமிளகாய் வடை தயார்
 17. பச்சபயறு பூரண அப்பத்தில் கொடுக்கப்பட்ட பச்ச பயிறை வேகவைத்து தண்ணீர் வடித்து விட்டு அதோடு தேங்காய் துருவல் வெல்லம் ஏலப்பொடி சேர்த்து மிக்ஸியில் அரைத்து நெய் சேர்த்து உருண்டையாக உருட்டிக்கொள்ளவும்
 18. மேல்மாவிற்கு கொடுத்த அரிசி உளுந்தை ஊற வைத்து அரைத்து உப்பு சேர்த்து கலந்து செய்து வைத்த பச்ச பயறு பூரணத்தை மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
 19. குணுக்கு மோர்குழம்பில் கொடுக்கப்பட்ட அரிசி உளுந்தை ஊறவைத்து அரைத்து கருவேப்பிலை பச்ச மிளகாய் உப்பு மிளகு சீரகம் சேர்த்துக் கலந்து சிறுசிறு போண்டா போல போட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
 20. குணுக்கு மோர்குழம்பில் அரைக்க கொடுத்தவற்றை அரைத்து தயிரில் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
 21. தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து செய்து வைத்த தயிர் கலவையை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி பரிமாறும் முன் செய்துவைத்த குணுக்கு சேர்த்தால் குணுக்கு மோர்குழம்பு தயார்
 22. மொச்சை கத்திரிக்காய் துவரனில் அரைக்க கொடுத்தவற்றை அரைக்கவும். மொச்சையை ஊறவைத்து வேகவைத்துக்கொள்ளவும்
 23. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து கத்திரிக்காய் மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும். வேகவைத்த மொச்சை அரைத்த விழுது உப்பு சேர்த்து கிளறி இறக்கினால் மொச்சை கத்திரிக்காய் துவரன் தாயார்
 24. ராஜ்மா சூப்பில் கொடுத்த ராஜ்மாவை ஊறவைத்து வேகவைத்து அரைத்துக்கொள்ளவும்
 25. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து தக்காளி அரைத்த ராஜ்மா உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி கொத்தமல்லி இலையை தூவினால் ராஜ்மா சூப் தயார்
 26. உளுந்து கீரில் கொடுத்த உருட்டு உளுந்தை நெய் விட்டு நன்றாக வறுக்கவும்
 27. அதில் பால் விட்டு வேகவிட்டு உளுந்து நன்றாக வெந்ததும் பனங்கற்கண்டு ஏலப்பொடி சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி பாதாம் துருவல் சேரத்தால் உளுந்து கீர் தயார்
 28. கடலைப்பருப்பு பச்சடியில் கொடுத்த கடலைப்பருப்பை ஊறவைத்து வேகவைத்துக்கொள்ளவும் கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வேகவைத்த கடலைப்பருப்பு சேர்த்து வதக்கி உப்பு காரப்பொடி ஆம்சூர் பொடி வெல்லம் சேர்த்து கிளறி இறக்கினால் கடலைப்பருப்பு பச்சடி ரெடி
 29. கொள்ளு பாலக் கிரேவியில் கொடுத்த கொள்ளை ஊறவைத்து வேகவைத்துக்கொள்ளவும். கீரையை தண்ணீர் விட்டு வேகவைத்துக்கொள்ளவும். கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து இஞ்சி பச்ச மிளகாய் தக்காளியை வதக்கி வேகவைத்த கொள்ளு கீரை உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி கொத்தமல்லி இலையை தூவினால் கொள்ளு பாலக் கிரேவி தயார்
 30. ராஜ்மா மசாலா பாத்தில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து தக்காளி குடமிளகாய் சேர்த்து வதக்கி வேகவைத்த ராஜ்மா , ஏற்கனவே வறுத்து திரித்த பொடி உப்பு சேர்த்து கிளறவும்
 31. சாதம் சேர்த்து கிளறினால் ராஜ்மா மசாலா பாத் தயார்
 32. கோஸம்பரிக்கு கொடுத்த பாசிப்பருப்பை ஊறவைத்து தண்ணீர் வடித்து அதோடு கொடுக்கப்பட்ட எல்லா பொருட்களையும் சேர்த்து கலந்தால் கோஸம்பரி தயார்
 33. தேங்காய் துருவலில் தண்ணீர் விட்டு முறையே முதல் மற்றும் இரண்டு பால் எடுக்கவும். பச்ச பயிறை ஊறவைத்து வேகவைத்துக்கொள்ளவும்
 34. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து குடமிளகாய் பச்ச மிளகாய் வேகவைத்த பச்ச பயறு இரண்டாம் பால் சேர்த்து வேகவிடவும். உப்பு மற்றும் முதல் பால் சேர்த்து இறக்கவும். பச்ச பயறு குடமிளகாய் ஸ்டூ தயார்
 35. ராஜ்மா காலிபிளவர் சப்ஜியில் கொடுத்த ராஜ்மாவை ஊறவைத்து வேகவைத்துக்கொள்ளவும். காலிபிளவரை கொதிக்கும் வெந்நீரில் மஞ்சள் பொடி சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வேகவைத்த ராஜ்மா காலிபிளவர் உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து கிளறி கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் ராஜ்மா காலிபிளவர் சப்ஜி தயார்
 36. கொண்டகடலையை ஊறவைத்து தண்ணீர் வடித்து வெயிலில் மூன்று நாட்கள் காயவைத்து ஈரமில்லாமல் எடுக்கவும். அதோடு நறுக்கிய மாங்காய் துண்டுகள் உப்பு சேர்த்து ஊறவிடவும். கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்க்கவும். இரண்டு மூன்று நாட்கள் ஊறியபின் அருமையான சுவையுடன் கூடிய கொண்ட கடலை மாங்காய் ஊறுகாய் தயார்.
 37. செய்து வைத்த எல்லாவற்றையும் சாதம் நெய் தயிர் உடன் பரிமாறவும்

எனது டிப்:

விருப்பப்பட்டால் வெங்காயம் பூண்டு சேர்க்கவும்.

Reviews for Dal special - grand fusion thali in tamil (1)

shyamala devi9 months ago

Wonderful
Reply
Krishnasamy Vidya Valli
9 months ago
thank you so much Shyamala

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.