வீடு / சமையல் குறிப்பு / பருப்பு சோறு

Photo of Dal rice by Fathima Beevi at BetterButter
273
0
0.0(0)
0

பருப்பு சோறு

Dec-25-2018
Fathima Beevi
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பருப்பு சோறு செய்முறை பற்றி

பருப்பு சோறு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சின்ன வெங்காயம் 100 கிராம்
  2. இஞ்சி-1 பெரிய துண்டு
  3. பூண்டுபற்கள்- 15
  4. ஒரு இன்ச் பட்டை
  5. கிராம்பு-4
  6. ஏலக்காய்-4
  7. 2 டேபிள் ஸ்பூன் நெய்
  8. 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  9. பிரியாணி இலை-2
  10. முந்திரி பருப்பு-10
  11. பச்சை மிளகாய்-2
  12. நறுக்கிய வெங்காயம்-1
  13. கருலேப்பில்லை-ஒரு கொத்து
  14. தக்காளி-3
  15. மிளகாய் தூள்-1/2 டீ ஸ்பூன்
  16. மஞ்சள் தூள்-1/4 டீ ஸ்பூன்
  17. பெருங்காயத்தூள்-ஒரு சிட்டிகை
  18. கரம் மசாலா தூள்-1/4 டீ ஸ்பூன் 
  19. தேவையான அளவு உப்பு
  20. துவரம்பருப்பு- 2 டம்ளர்
  21. அரிசி- 1/2 கிலோ
  22. தேவையான அளவு தண்ணீர்
  23. கொத்தமல்லி இலை மற்றும் புதினா -ஒரு கைப்பிடி

வழிமுறைகள்

  1. சின்ன வெங்காயம் 100 கிராம் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்
  2. இஞ்சி-1 பெரிய துண்டு, பூண்டுபற்கள்- 15, ஒரு இன்ச் பட்டை, கிராம்பு-4, ஏலக்காய்-4 சேர்த்து அரைத்து எடுக்கவும்
  3. குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் நெய், 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடான பின் முந்திரி பருப்பு-10 சேர்க்கவும்
  4. பிரியாணி இலை-2 சேர்க்கவும்
  5. பச்சை மிளகாய்-2 இரண்டாக கீரி சேர்க்கவும்
  6. நறுக்கிய வெங்காயம்-1, கருலேப்பில்லை-ஒரு கொத்து சேர்த்து வதக்கவும்
  7. வெங்காயம் சிறிது வதங்கியதும், தக்காளி-3 நறுக்கி சேர்த்து வதக்கவும்
  8. அரைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்
  9. அரைத்த இஞ்சி பூண்டு மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும்
  10. நன்றாக வதங்கியதும் மிளகாய் தூள்-1/2 டீ ஸ்பூன், மஞ்சள் தூள்-1/4 டீ ஸ்பூன், பெருங்காயத்தூள்-ஒரு சிட்டிகை, கரம் மசாலா தூள்-1/4 டீ ஸ்பூன்  சேர்த்து வதக்கவும்
  11. தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்
  12. 1/2 கிலோ அரிசி மற்றும் 2 டம்ளர் துவரம்பருப்பை தண்ணீரில் களைந்து விட்டு பின்பு சேர்க்கவும். நன்றாக கிளறி விடவும்
  13. தேவையான அளவு தண்ணீர்(1:2 விகிதத்தில்) சேர்க்கவும்
  14. கொத்தமல்லி இலை மற்றும் புதினா -ஒரு கைப்பிடி சேர்க்கவும்
  15. குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  16. சுவையான பருப்பு சோறு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்