வீடு / சமையல் குறிப்பு / குதிரைவாலி அரிசி வேர்க்கடலை சாதம்

Photo of Barnyard millet groundnut rice by Fathima Beevi at BetterButter
561
0
0.0(0)
0

குதிரைவாலி அரிசி வேர்க்கடலை சாதம்

Dec-25-2018
Fathima Beevi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

குதிரைவாலி அரிசி வேர்க்கடலை சாதம் செய்முறை பற்றி

குதிரைவாலி அரிசி வேர்க்கடலை சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. குதிரைவாலி அரிசி -1 கப்
  2. உப்பு- தேவையான அளவு
  3. வேர்க்கடலை-1/2 கப்
  4. மிளகாய் வற்றல்-5
  5. தேங்காய் துருவல்-1/4 கப்
  6. தேங்காய் எண்ணெய்-1 1/2 டேபிள் ஸ்பூன்
  7. கடுகு-1/4டீ ஸ்பூன்
  8. சீரகம்-1/4 டீ ஸ்பூன்
  9. கருலேப்பில்லை- ஒரு கொத்து
  10. பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை
  11. வேர்க்கடலை-1 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வேர்க்கடலை, மிளகாய் வற்றல், தேங்காய் துருவல் ஒரு கடாயில் நன்கு வறுத்து எடுக்கவும்.
  2. பின்பு நன்றாக குளிர வைத்து, மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடித்து எடுக்கவும்
  3. குதிரை வாலி அரிசியை தண்ணீரில் களைந்து விட்டு குக்கரில் சேர்த்து, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின், கடுகு, சீரகம், கருலேப்பில்லை சேர்த்து தாளிக்கவும்.
  5. பின்பு ஒரு டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை சேர்த்து வறுத்து, அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறவும்.
  6. பெருங்காயத்தூள் சேர்த்து கிளறவும்.
  7. வேக வைத்துள்ள குதிரை வாலி சாதம் சேர்த்து நன்கு கிளறவும்.
  8. தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான சூட்டில் 10 நிமிடம் நன்றாக கிளறி இறக்கவும்.
  9. தேங்காய் துவையளுடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்