வீடு / சமையல் குறிப்பு / ராஜ்மா மசாலா

Photo of Rajma masal by Fathima Beevi at BetterButter
136
0
0.0(0)
0

ராஜ்மா மசாலா

Dec-25-2018
Fathima Beevi
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ராஜ்மா மசாலா செய்முறை பற்றி

ராஜ்மா மசாலா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ராஜ்மா-2 கப்
  2. இஞ்சி பூண்டு விழுது-2 டீஸ்பூன்
  3. வெங்காயம்-2
  4. தக்காளி-3
  5. பச்சை மிளகாய்-2
  6. கொத்தமல்லி இலை-1/4 கப்
  7. பால்-1 கப்
  8. கரம் மசாலா தூள்-2 டீஸ்பூன்
  9. சீரகத் தூள்-1 டீஸ்பூன்
  10. மிளகாய் தூள்-1 டீஸ்பூன்
  11. மஞ்சள் தூள்-1 டீஸ்பூன்
  12. மல்லித் தூள்-1 டீஸ்பூன்
  13. உப்பு- தேவையான அளவு
  14. பிரியாணி இலை-2
  15. பட்டை-1
  16. ஏலக்காய்-2
  17. கிராம்பு-1
  18. தேங்காய் எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்
  19. தாளிக்க தேவையான பொருட்கள்:
  20. நெய்-1 டேபிள் ஸ்பூன்
  21. காய்ந்த மிளகாய் வற்றல்-2
  22. காய்ந்த வெந்தய கீரை-1 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ராஜ்மா சுண்டலை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
  2. நன்றாக ஊறிய பின் கழுவி விட்டு குக்கரில் சிறிது உப்பு மற்றும் தண்ணீருடன் சேர்த்து 6 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  3. வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை நறுக்கிக் கொள்ளவும்
  4. குக்கரில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடான பின் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்க்கவும்.
  5. நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  7. கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லிதூள், சீரகத் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
  8. பின்பு பால் சேர்த்து கிளறி, வேக வைத்த ராஜ்மாவை சேர்த்து மேலும் 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  9. ஒரு வாணலியில் நெய் ஊற்றி சூடான பின் காய்ந்த மிளகாய் வற்றல், காய்ந்த வெந்தய கீரை சேர்த்து தாளித்து கிரேவியில் சேர்க்கவும்.
  10. ராஜ்மா மசாலா தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்