வீடு / சமையல் குறிப்பு / சிக்கன்,பச்சைப்பட்டாணி செமி கிரேவி

Photo of Chicken, green peas semi gravy by Wahida Abdul Hameed at BetterButter
403
0
0.0(0)
0

சிக்கன்,பச்சைப்பட்டாணி செமி கிரேவி

Dec-25-2018
Wahida Abdul Hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிக்கன்,பச்சைப்பட்டாணி செமி கிரேவி செய்முறை பற்றி

குறைந்த பொருட்களை வைத்து சுலபமாக செய்யக்கூடிய ஒரு நான் வெஜ் சைட் டிஷ்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெங்காயம் 4
  2. சிக்கன் ஒரு கிலோ
  3. தக்காளி 4
  4. பச்சை பட்டாணி ஒரு கப்
  5. பச்சைமிளகாய் 2
  6. மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  7. ஹோம் மேட் குழம்பு மசாலா பொடி 2 ஹோம் மேட் குழம்பு மசாலா பொடி 1 ஸ்பூன்
  8. உப்பு ருசிக்கேற்ப
  9. இஞ்சி பூண்டு விழுது ஒரு டேபிள்ஸ்பூன்
  10. கருவேப்பிலை ஒரு கொத்து
  11. கொத்துமல்லி இலை சிறிதளவு
  12. உருளைக்கிழங்கு 2
  13. எண்ணெய் தேவையான அளவு
  14. பட்டை ஒரு பெரிய துண்டு
  15. கிராம்பு-3
  16. ஏலக்காய்-3

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், கருவேப்பிலை,பச்சை மிளகாய், சிறிதளவு வெங்காயம் சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது போட்டு தாளிக்கவும்.
  2. அதனுடன் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு லேசாக வதக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் சுத்தம் செய்த சிக்கனை ஒன்றாக போட்டு நன்றாக கலந்து வதக்கவும்.
  4. பச்சை வாசனை போனவுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை நன்கு கிளறவும்.
  5. இதனுடன் பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு, மிளகாய்த்தூள், ஹோம் மேட் குழம்பு மசாலா பவுடர், தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 10 நிமிடம் வேக விடவும்.
  6. ஆவி அடங்கியவுடன் குக்கரை திறந்து நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்