வீடு / சமையல் குறிப்பு / பாசிபயிறு பூண்டு குழம்பு

Photo of Greengram garlic curry by Fathima Beevi at BetterButter
75
0
0.0(0)
0

பாசிபயிறு பூண்டு குழம்பு

Dec-25-2018
Fathima Beevi
495 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பாசிபயிறு பூண்டு குழம்பு செய்முறை பற்றி

பாசிபயிறு பூண்டு குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாசிபயிறு   - 1 கப்
  2. பூண்டு பற்கள்  -15
  3. சின்ன வெங்காயம்-12 - பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  4. தக்காளி-1 - பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  5. மிளகாய் தூள்-1 1/2 டீ ஸ்பூன்
  6. மல்லித் தூள்- 1 1/2 டேபிள் ஸ்பூன்
  7. மஞ்சள் தூள்- 1/4 டீ ஸ்பூன்
  8. பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை
  9. உப்பு- தேவையான அளவு
  10. புளி - 1 நெல்லிக்காய் அளவு - தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
  11. கடுகு-1/4 டீ ஸ்பூன்
  12. வெந்தயம் -1/4 டீ ஸ்பூன்
  13. கருலேப்பில்லை -ஒரு கொத்து
  14. தேங்காய் எண்ணெய்- 1 1/2 டேபிள் ஸ்பூன்
  15. கொத்தமல்லி இலை- 1 டேபிள் ஸ்பூன்
  16. மசாலாவிற்கு தேவையான பொருட்கள்:
  17. துருவிய தேங்காய்- 1/2 கப்
  18. சீரகம்- 1/2 டீ ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாசிபயரை இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
  2. குக்கரில் ஊறிய பாசிபயிர், சிறிது தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து 1 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  3. மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், சீரகம் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்
  4. ஒரு பாத்திரத்தில் புளி மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து புளி கரைசல் மட்டும் வடிகட்டி எடுத்து வைக்கவும்.
  5. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, வெந்தயம் பொடித்து கருலேப்பில்லை சேர்க்கவும்.
  6. பின்பு நறுக்கிய வெங்காயம், தக்காளி  சேர்த்து வதக்கவும்.
  7. பின்பு பூண்டுபற்களை சேர்த்து வதக்கவும்.
  8. சிறிது வதங்கியதும்  மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லி தூள், பெருங் காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
  9. பின்னர் கரைத்து வைத்துள்ள புளி கரைசல், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்க்கவும்.
  10. வேக வைத்த பாசிபயரை சேர்க்கவும்.
  11. 5 நிமிடத்திற்கு மூடி வைத்து  கொதிக்க விடவும்.
  12. மேலும் 10 நிமிடத்திற்கு மிதமான சூட்டில் வைத்து வேக வைக்கவும். பின் கொத்தமல்லி இலை களை தூவி விடவும்.
  13. சூடான சாதத்துடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்