Photo of NAVARATHNA ADAI by Radha Balu at BetterButter
481
0
0.0(0)
0

நவரத்ன அடை

Dec-25-2018
Radha Balu
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நவரத்ன அடை செய்முறை பற்றி

பல பருப்பு வகைகள் சேர்த்து செய்யும் சத்தான அடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சை  அரிசி - 1½ கப்
  2. துவரம்பருப்பு - ¼ கப்
  3. கடலைப்பருப்பு - 1 பிடி
  4. பயறு - 1 பிடி
  5. கொத்துக்கடலை, கொள்ளு இரண்டும் சேர்த்து - 1பிடி 
  6. கருப்பு உளுத்தம்பருப்பு - 1பிடி 
  7. மசூர்தால், காராமணி, நிலக்கடலை மூன்றும் சேர்த்து - 1 பிடி
  8. மிளகாய்  வற்றல் - 10
  9. பெரிய  வெங்காயம் - 2
  10. கறிவேப்பிலை - 2 கொத்து
  11. பெருங்காயப்பொடி - சிறிதளவு
  12. உப்பு - தேவையான  அளவு
  13. எண்ணை

வழிமுறைகள்

  1. அரிசி,  பருப்புகளை ஒன்றாக  சேர்த்து, மிளகாய் வற்றலுடன்தண்ணீரில்  1/2 மணி  நேரம்  ஊற வைக்கவும்.
  2. வெங்காயத்தைப் பொடியாக  நறுக்கவும்.
  3. ஊறவைத்த  அரிசி  பருப்பு கலவையை  மிக்ஸியில் சற்று  கரகரப்பாக அரைக்கவும்.உப்பு, பெருங்காயப்பொடி, நறுக்கிய  வெங்காயம்,  கறிவேப்பிலை சேர்த்து  நன்கு  கலக்கவும்.
  4. கனமான  அடைக்கல்லை கேசில்  வைத்து  மாவை சற்று கனமாக  ஊற்றி,நடுவில் ஒரு  சிறிய  ஓட்டை  போட்டு நல்லெண்ணை  விடவும். 
  5. அடுப்பை சிறியதாக வைக்கவும். நன்குவெந்து ஓரம் சிவந்ததும்,  திருப்பிப் போட்டு  தேங்காய் எண்ணை விட்டுமொறு மொறுப்பானதும்   எடுக்கவும்.
  6. சாம்பார்,  வெண்ணை,  வெல்லத்துடன் பரிமாறவும்.பல தானியம் கலந்த இந்த அடை மிக ருசியாக இருக்கும். உடலுக்கு ஊட்டம் தரும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்