வீடு / சமையல் குறிப்பு / முட்டைகோஸ் கடலைபருப்பு பாசிபருப்பு  கூட்டு

Photo of Cabbage channa dal moong dal kootu by Fathima Beevi at BetterButter
232
0
0.0(0)
0

முட்டைகோஸ் கடலைபருப்பு பாசிபருப்பு  கூட்டு

Dec-25-2018
Fathima Beevi
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

முட்டைகோஸ் கடலைபருப்பு பாசிபருப்பு  கூட்டு செய்முறை பற்றி

முட்டைகோஸ் கடலைபருப்பு பாசிபருப்பு கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கடலைப் பருப்பு- 1/2 கப்
  2. பாசிப்பருப்பு-1/4 கப்
  3. முட்டைகோஸ்-1/2
  4. காரட்-2
  5. பெரிய வெங்காயம்-1
  6. தக்காளி-1
  7. பச்சை மிளகாய்-1
  8. மஞ்சள் தூள்- 1/4 டீ ஸ்பூன்
  9. பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை
  10. கரம் மசாலா தூள்- ஒரு சிட்டிகை
  11. உப்பு- தேவையான அளவு
  12. மசாலாவிற்கு தேவையான பொருட்கள்:
  13. துருவிய தேங்காய்- 1/4 கப்
  14. சீரகம்- 1/4 டீ ஸ்பூன்
  15. பச்சை மிளகாய்-1
  16. தாளிக்க தேவையான பொருட்கள்:
  17. தேங்காய் எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்
  18. கடுகு-1/4 டீ ஸ்பூன்
  19. சீரகம் -1/4 டீ ஸ்பூன்
  20. கருலேப்பில்லை -ஒரு கொத்து
  21. காய்ந்தமிளகாய் வற்றல்-2
  22. கொத்தமல்லி இலை- 1 டேபிள் ஸ்பூன் 

வழிமுறைகள்

  1. மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், சீரகம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்
  2. காரட், முட்டைகோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  3. பெரிய வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  4. கடலைப் பருப்பு, பாசி பருப்பை சுத்தம் செய்து கொள்ளவும்
  5. ஒரு குக்கரில் கடலைப் பருப்பு, பாசி பருப்பு, மஞ்சள் தூள், பெருங் காயத்தூள், 1 பச்சை மிளகாய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து 2 விசில்வரும் வரை வேக வைக்கவும்.
  6. விசில் அடங்கியதும், வேக வைத்த பருப்பு மற்றும் தண்ணீரை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
  7. பின்பு குக்கரில்  எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, சீரகம் பொடித்து கருலேப்பில்லை, காய்ந்த மிளகாய் வற்றல், வெங்காயம், தக்காளி  சேர்த்து வதக்கவும்.
  8. பின்பு நறுக்கிய முட்டைகோஸ், காரட் சேர்த்து வதக்கவும்.
  9. காய்கள் சிறிது வதங்கியதும், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, வேக வைத்த பருப்பு மற்றும் பருப்பு வேக வைத்த தண்ணீர்  சேர்த்து கிளறவும்.
  10. பின்பு உப்பு, கரம் மசாலா தூள்  சேர்த்து கிளறி மேலும் 1 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  11. விசில் அடங்கியதும்  கொத்தமல்லி இலை களை தூவி கிளறவும்.
  12. சூடான சாதத்துடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்