வீடு / சமையல் குறிப்பு / உளுந்து வடை

Photo of Uradh dhaal vadai by Bena Aafra at BetterButter
426
1
0.0(0)
0

உளுந்து வடை

Dec-26-2018
Bena Aafra
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

உளுந்து வடை செய்முறை பற்றி

தமிழ்நாட்டு விழாக்களில் செய்யக் கூடிய உணவுகளில் மிகவும் முக்கியமான ஒரு ரெசிபி உளுந்த வடை. .

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உளுந்து அரை கப்
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. மிளகு ஒரு மேசைக்கரண்டி
  4. பச்சைமிளகாய்-2
  5. கறிவேப்பிலை
  6. கொத்தமல்லி இலை
  7. இஞ்சி ஒரு துண்டு
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. சீரகம் -1/4 மேஜைக்கரண்டி
  10. எண்ணெய் பொறிக்க தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. உளுந்தை சுத்தம் செய்து ஊற வைத்துக் கொள்ளவும்.
  2. ஊற வைத்த உளுந்தை மிக்ஸியில் சேர்த்து உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்
  3. வடை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்
  4. உடன் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, சேர்க்கவும்.
  5. நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
  6. வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்
  7. மாவை சிறிது எடுத்து கையில் வைத்து தட்டி நடுவில் சின்ன ஓட்டைபோட்டு எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
  8. சூடான உளுந்த வடை தயார் சட்னியுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்