வீடு / சமையல் குறிப்பு / பய்யோளி சிக்கன் ப்ரை

Photo of Payyoli chicken fry by Sumaiya Arafath at BetterButter
289
1
0.0(0)
0

பய்யோளி சிக்கன் ப்ரை

Dec-30-2018
Sumaiya Arafath
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பய்யோளி சிக்கன் ப்ரை செய்முறை பற்றி

இது மலபாரில் பிரபலமான சிக்கன் பிரை.பய்யோளி என்பது மலபாரில் உள்ள ஒரு ஊரின் பெயர்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • கேரளா
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோழி இறைச்சி 200 கிராம்
  2. காஷ்மீர் வத்தல் மிளகாய் 10
  3. மேரினேட் செய்ய:
  4. இஞ்சி பூண்டு விழுது இரண்டு தேக்கரண்டி
  5. மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
  6. காஷ்மீர் மிளகாய் தூள் அரை தேக்கரண்டி
  7. பெருஞ்சீரக தூள் 1 தே.க
  8. கரம் மசாலா 1 தே க
  9. மீட் மசாலா 1 தே.க
  10. சோள மாவு2 மே.க
  11. வினீகர் 2 தே.க
  12. பச்சை மிளகாய் நீளத்தில் அரிந்தது3
  13. உப்பு
  14. அலங்கரிக்க;
  15. கறிவேப்பிலை 2 கொத்து
  16. துருவிய தேங்காய் 3 மே.க
  17. தேங்காய் எண்ணை பொரிக்க

வழிமுறைகள்

  1. முதலில் மிளகாயை சிறிது தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து மிக்ஸியில் அரைக்கவும்
  2. இதிலிருந்து ஒரு தேக்கரண்டி மசாலாவை மாற்றி வைக்கவும்
  3. மேரினேட் செய்ய தேவையான பொருட்களை வைத்து கோழி நன்றாக மேரினேட் செய்யவும்
  4. குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும்
  5. ஒரு பாத்திரத்தில் துருவிய தேங்காய் மிளகாய் பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து வைக்கவும்
  6. வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கோழி இறைச்சியை நன்றாக பொரித்தெடுக்கவும்
  7. அதே எண்ணெயில் துருவிய தேங்காய் பச்சை மிளகாய் கறிவேப்பிலை போட்டு நன்றாக பொரித்தெடுக்கவும்
  8. தேங்காய் கருகாமல் பார்த்துக் கொள்ளவும்
  9. சுவையும் மணமும் நிறைந்த சிக்கன் பிரை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்