வீடு / சமையல் குறிப்பு / தக்காளி புலாவ், குக்கும்பர் ரைத்தா, சால்ட் &பெப்பர் எஃக்

Photo of Tomato pulao, cucumber raita, salt&pepper egg by Wahida Abdul Hameed at BetterButter
0
0
0(0)
0

தக்காளி புலாவ், குக்கும்பர் ரைத்தா, சால்ட் &பெப்பர் எஃக்

Jan-01-2019
Wahida Abdul Hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தக்காளி புலாவ், குக்கும்பர் ரைத்தா, சால்ட் &பெப்பர் எஃக் செய்முறை பற்றி

மிகவும் சுலபமாக செய்யக்கூடிய புலாவ்.

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి
  • రాత్రి విందు
  • తమిళనాడు
  • ప్రెజర్ కుక్
  • మిళితం
  • ఉడికించాలి
  • ప్రధాన వంటకం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி 1 ½ கப் [பாஸ்மதி அரிசி அல்லது புழுங்கல் அரிசி]
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 3
  4. பச்சைமிளகாய்-2
  5. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  6. சோம்பு 1 ஸ்பூன்
  7. மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  8. கரம் மசாலா 1 ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் ½ ஸ்பூன்
  10. பட்டை ஒரு பெரிய துண்டு
  11. பூண்டு 6 பல்
  12. கிராம்பு-3
  13. ஏலக்காய் 3
  14. கல்பாசி சிறிதளவு
  15. தண்ணீர் 3 கப்
  16. உப்பு ருசிக்கேற்ப
  17. எண்ணெய் /நெய் தேவையான அளவு
  18. கொத்துமல்லி இலை சிறிதளவு
  19. குகும்பர் ரய்தா செய்ய:-
  20. வெங்காயம் 1
  21. பச்சைமிளகாய்-2
  22. வெள்ளரிக்காய் 2
  23. கொத்தமல்லி சிறிதளவு
  24. தயிர் ஒரு கப்
  25. உப்பு தேவையான அளவு
  26. சால்ட் அன்ட் பெப்பர் எஃக் செய்ய :-
  27. மிளகு ஒரு ஸ்பூன்
  28. சீரகம் ஒரு ஸ்பூன்
  29. அவித்த முட்டை 3
  30. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் தக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  2. வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து கொள்ளவும், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, கல்பாசி, பச்சை மிளகாய், பூண்டு மற்றும் நறுக்கிய வெங்காயத்தில் இருந்து சிறிதளவு போட்டு தாளிக்கவும்.
  4. இதனுடன் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  5. இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து லேசாக வதக்கவும்.
  6. அரைத்த தக்காளி விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.
  7. இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்க்கவும்.
  8. இதனுடன் நறுக்கிய கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அரிசியை போட்டு குக்கரை மூடி 15 நிமிடம் வேக விடவும்.
  9. சுவையான எளிதில் செய்யக்கூடிய தக்காளி புலாவ் தயார்.
  10. குக்கும்பர் ரைத்தா :-
  11. ஒரு கிண்ணத்தில் வெங்காயம், பச்சை மிளகாய் வெள்ளரிக்காய் கொத்தமல்லி பொடியாக நறுக்கி, அதனுடன் உப்பு சேர்க்கவும்.
  12. இதனுடன் அடித்த தயிர் சேர்த்து நன்றாக கிளறினால் சுவையான வெள்ளரிக்காய் வெங்காய சம்பல்/ குக்கும்பர் ரைத்தா தயார்.
  13. சால்ட் அண்ட் பெப்பர் எஃக் செய்ய :-
  14. மிளகு, சீரகம், உப்பு மூன்றையும் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும், முட்டையை அவித்துக் கொள்ளவும், அவித்த முட்டை பாதியாக வெட்டி அதில் மிளகு சீரகத் தூள் தூவவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்