வீடு / சமையல் குறிப்பு / முட்டை கோலா உருண்டை

Photo of Spicy Egg balls by Priya Suresh at BetterButter
439
0
0.0(0)
0

முட்டை கோலா உருண்டை

Jan-02-2019
Priya Suresh
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முட்டை கோலா உருண்டை செய்முறை பற்றி

வழக்கமாக காய்கறி கொண்டு செய்யக்கூடிய கோலா உருண்டையை இப்போது முட்டையிலும் செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • அப்பிடைசர்கள்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 4 வேகவைத்த முட்டை
  2. 1 டேபிள்ஸ்பூன் பெருஞ்சீரகம்
  3. 1 டீஸ்பூன் கசகசா
  4. 2 பச்சை மிளகாய் நறுக்கியது
  5. 4டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவியது
  6. 2 பூண்டு பல்
  7. 7டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை
  8. 1வெங்காயம் நறுக்கியது
  9. கருவேப்பிலை சிறிதளவு
  10. எண்ணை பொரிக்க
  11. உப்பு தேவைக்கு

வழிமுறைகள்

  1. வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்
  2. கசகசா ,துருவிய தேங்காய், பூண்டு ,பெருஞ்சீரகம் ,வதக்கிய வெங்காயம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  3. அரைத்த விழுதுடன் முட்டையை சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்
  4. சேர்த்து அரைக்கும் பொழுது கடினமாக இருந்தால் சிறிது தண்ணீர் தெளித்து அரைக்கலாம்
  5. அரைத்த முட்டை விழுது, பொட்டுக்கடலை, உப்பு சேர்த்து ஒரு பவுலில் கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  6. பிசைந்து வைத்திருக்கும் மாவில் இருந்து சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
  7. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்