வீடு / சமையல் குறிப்பு / கார பருப்பு போளி

Photo of Khara paruppu poli by Priya Suresh at BetterButter
448
0
0.0(0)
0

கார பருப்பு போளி

Jan-02-2019
Priya Suresh
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கார பருப்பு போளி செய்முறை பற்றி

இனிப்பான கடலைப்பருப்பு போளி இப்போது காரமாக

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 2 கப் கோதுமை மாவு
  2. 3/4கப் வெதுவெதுப்பான தண்ணீர்
  3. உப்பு தேவையான அளவு
  4. 2 டேபிள்ஸ்பூன் சூடான எண்ணெய்
  5. 2கப் கடலைப்பருப்பு
  6. 2 பூண்டு பல்
  7. 1டீஸ்பூன் வறுத்த சீரகத்தூள்
  8. 1/4டீஸ்பூன் மஞ்சள்தூள்
  9. 2 பச்சை மிளகாய் நறுக்கியது
  10. 1/4துருவிய தேங்காய்

வழிமுறைகள்

  1. கோதுமை மாவு, உப்பு, சூடான எண்ணெய் மூன்றையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்
  2. பிசைந்த மாவை ஒரு 15 நிமிடம் ஊற வைக்கவும்
  3. கடலைப் பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து பிரஷர் குக்கரில் வேக வைக்கவும்
  4. வேக வைத்த கடலைப்பருப்பு ஆறியபின் பூண்டு, தேங்காய், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  5. அரைத்த பருப்புடன் வறுத்த சீரகத்தூள் ,உப்பு சேர்த்து மசித்துக் கொள்ளவும்
  6. சப்பாத்தி மாவில் இருந்து சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
  7. உருட்டிய உருண்டைகளை சிறிய சப்பாத்திகளாக இட்டு பூரணத்தை வைத்து மூடிக்கொள்ளவும்
  8. உருண்டைகளை ஒன்றன்பின் ஒன்றாக பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தேய்த்து நன்றாக தட்டி கொள்ளவும்
  9. தோசைக்கல்லை சூடாக்கி தேவையான எண்ணெய் விடவும்
  10. பூரணம் உள்ள சப்பாத்திகளை இரண்டு பக்கமும் பொன்னிறமாக வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  11. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்