அரிசி அவல் வெங்காய கச்சோரி | Rice flakes Onion kachori in Tamil

எழுதியவர் Priya Suresh  |  3rd Jan 2019  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Rice flakes Onion kachori by Priya Suresh at BetterButter
அரிசி அவல் வெங்காய கச்சோரிPriya Suresh
 • ஆயத்த நேரம்

  40

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  5

  மக்கள்

0

0

அரிசி அவல் வெங்காய கச்சோரி

அரிசி அவல் வெங்காய கச்சோரி தேவையான பொருட்கள் ( Ingredients to make Rice flakes Onion kachori in Tamil )

 • 1கப் மைதா
 • 1 கப் கோதுமை மாவு
 • 1/4டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
 • 1/4டீஸ்பூன் சீரகம்
 • 2டேபிள்ஸ்பூன் சூடான எண்ணெய்
 • உப்பு தேவைக்கு
 • எண்ணெய் பொரிப்பதற்கு
 • பூரணத்துக்கு தேவையானவை
 • 3 வெங்காயம் பொடியாக நறுக்கியது
 • 1/2 கப் அரிசி அவல்
 • 1டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி தூள்
 • 2 பச்சை மிளகாய் நறுக்கியது
 • 1/2டேபிள்ஸ்பூன் சிகப்பு மிளகாய் தூள்
 • 1/2 டீஸ்பூன் மாங்காய்தூள்
 • 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
 • கொத்தமல்லி இலை சிறிதளவு
 • 1/2டீஸ்பூன் கரம் மசாலா
 • உப்பு தேவைக்கு
 • 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

அரிசி அவல் வெங்காய கச்சோரி செய்வது எப்படி | How to make Rice flakes Onion kachori in Tamil

 1. எண்ணை சிறிதளவு வாணலில் சூடாகியதும் வெங்காயத்தை கொட்டி நன்றாக வதக்கவும்
 2. நீரில் அரிசி அவலை ஊறவைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்
 3. வெங்காயத்தில் கொத்தமல்லி தூள், நறுக்கிய பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் தூள் ,மாங்காய் தூள் ,சீரகத்தூள் ,கரம் மசாலாத்தூள், சேர்த்து வதக்கவும்
 4. அத்துடன் நறுக்கிய கொத்தமல்லி இலை ,உப்பு சேர்த்து வதக்கவும்
 5. அரிசி அவளை வெங்காயத்துடன் சேர்த்து சிறிது நேரம் வதக்கி அடுப்பை அணைக்கவும்
 6. கோதுமை ,மைதா ,உப்பு ,பேக்கிங் பவுடர் ,சீரகம் ,சூடான எண்ணையை ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளவும்
 7. தண்ணீர் சேர்த்து மாவை சப்பாத்தி பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்
 8. இந்த சப்பாத்தி மாவை ஒரு அரை மணி நேரம் ஊற வைக்கவும்
 9. மாவிலிருந்து சிறிய உருண்டைகளாக உருட்டி சிறிய வட்டங்களாக தேய்த்துக் கொள்ளவும்
 10. ஏற்கனவே தயார் செய்த வெங்காய அரிசி அவல் பூரணத்தை சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்
 11. சப்பாத்தி வட்டத்தினுள் தேவையான அளவு பூரணத்தை வைத்து மாவை நன்றாக மூடி அவற்றை சிறிய வட்டமாக உருட்டிக் கொள்ளவும்
 12. பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் சூடு செய்யவும்
 13. சூடானதும் ஏற்கனவே தயாரித்து வைத்த கச்சோரியை ஒன்றன்பின் ஒன்றாக எண்ணெயிலிட்டு இரண்டு புறமும் பொன்னிறமாக வரும் வரை வறுத்து எடுக்கவும்
 14. புதினா சட்னியுடன் பரிமாறவும்

Reviews for Rice flakes Onion kachori in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.