வீடு / சமையல் குறிப்பு / டின்னர் காம்போ

Photo of Dinner combo by sudha rani at BetterButter
198
0
0(0)
0

டின்னர் காம்போ

Jan-04-2019
sudha rani
300 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
120 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

டின்னர் காம்போ செய்முறை பற்றி

பார்ட்டி உணவு

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • తేలికైనవి
 • రాత్రి విందు
 • తమిళనాడు
 • ప్రధాన వంటకం
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

 1. நான்:
 2. மைதா 3 கப்
 3. தயிர் 1/2 கப்
 4. சோடா உப்பு 3/4 ஸ்பூன்
 5. பால் 1/2 கப்
 6. சர்க்கரை 2 டேபிள்ஸ்பூன்
 7. சுடுதண்ணீர் 1 டேபிள்ஸ்பூன்
 8. நெய் 2 டேபிள்ஸ்பூன்
 9. உப்பு தேவையான அளவு
 10. பனீர் பட்டர் மசாலா:
 11. பனீர் 1/4 கிலோ
 12. வெங்காயம் 1/4 கிலோ
 13. தக்காளி 1/4 கிலோ
 14. மஞ்சள் தூள் 1/2ஸ்பூன்
 15. குழம்பு மசாலா தூள் 1 ஸ்பூன்
 16. கரம் மசாலா தூள் 1ஸ்பூன்
 17. எண்ணெய் 1/4 கப்
 18. பட்டர் 15 கிராம் (3 டேபிள்ஸ்பூன்)
 19. சீரகம் 1/2 ஸ்பூன்
 20. பிரியாணி இலை 1
 21. அரைக்க:
 22. முந்திரி 20
 23. கசகசா 3 டேபிள்ஸ்பூன்
 24. வறுத்து பொடிக்க:
 25. பட்டை 2
 26. கிராம்பு 2
 27. ஏலக்காய் 2
 28. நெய் 1 ஸ்பூன்
 29. பரோட்டா:
 30. மைதா 1/2 கிலோ
 31. எண்ணெய் 1 கப்
 32. உப்பு தேவையான அளவு
 33. சென்னா மசாலா:
 34. வெள்ளை சுண்டல் 1/4 கிலோ
 35. வெங்காயம் 1/4 கிலோ
 36. தக்காளி 1/4 கிலோ
 37. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
 38. குழம்பு மிளகாய் தூள் 1 ஸ்பூன்
 39. சன்னா மசாலா தூள் 3 ஸ்பூன்
 40. சீரகம் 1/4 ஸ்பூன்
 41. பிரியாணி இலை
 42. இஞ்சி 1 துண்டு
 43. பூண்டு 6 பல்
 44. பச்சை மிளகாய் 4
 45. எண்ணெய் 1/8 கப்
 46. வறுத்து பொடிக்க:
 47. பட்டை 2
 48. கிராம்பு 2
 49. ஏலக்காய் 2
 50. நெய் 1 ஸ்பூன்
 51. சில்லி பரோட்டா :
 52. பரோட்டா 8
 53. வெங்காயம் 2
 54. தக்காளி 2
 55. குடைமிளகாய் 1
 56. பச்சை மிளகாய் 4
 57. குழம்பு மிளகாய் தூள் 4 ஸ்பூன்
 58. எண்ணெய் 1/4 கப்புக்கு குறைவாக
 59. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

 1. டின்னர் காம்போ:
 2. நான்:
 3. சோடா உப்பை சுடுதண்ணீரில் கலந்து கொள்ளவும்
 4. பாலுடன் சர்க்கரை மற்றும் சோடா கரைசல் ஊற்றி நன்கு அடித்து கலந்து 10 நிமிடங்கள் வரை வைக்கவும்
 5. பின் தயிர் ஊற்றி நன்கு அடித்து கலந்து கொண்டு மீண்டும் 10 நிமிடங்கள் வரை வைக்கவும்
 6. பின் மாவுடன் உப்பை சேர்த்து ஜலித்து நடுவில் குழி செய்து கொள்ளவும்
 7. அதில் நன்கு நுரைத்து ரெடியாக உள்ள பால் கலவையை சேர்த்து சிறிது சிறிதாக நன்கு பிசைந்து கொள்ளவும்
 8. பின் நெய் தடவி 3 மணி நேரம் வரை ஊறவிடவும்
 9. பின் மீண்டும் நன்கு பிசைந்து சப்பாத்தி போல் திரட்டி வைத்து கொள்ளவும்
 10. பின் சூடான கல்லில் சுட்டெடுக்கவும்
 11. சுட்டு எடுத்து சிறிது பட்டர் தடவி வைக்கவும்
 12. பனீர் பட்டர் மசாலா
 13. பனீரை செவ்வக வடிவ துண்டுகளாக நறுக்கி வைக்கவும்
 14. முந்திரி கசாகசாவை தனித்தனியாக 1 மணி நேரம் ஊற வைத்து பின் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்
 15. வாணலியில் சிறிது பட்டர் மற்றும் எண்ணெய் விட்டு சூடானதும் பனீரை லைட்டாக பொரித்து எடுக்கவும்
 16. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்
 17. பின் துருவிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
 18. வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் தூள் வகைகள் மற்றும் துருவிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்
 19. பின் அரைத்த விழுது உப்பு மற்றும் சேர்த்து நன்கு வதக்கவும்
 20. பின் பொரித்த பனீரை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்
 21. சூடான கிரேவி மேல் பட்டரை விட்டு மூடி வைக்கவும்
 22. பரோட்டா:
 23. மைதா உடன் உப்பு சேர்த்து பிசைந்து கொண்டு எண்ணெய் விட்டு 2 மணி நேரம் வரை ஊறவிடவும்
 24. பின் உருண்டைகளாக உருட்டி கிண்ணம் போல் செய்து நடுவில் எண்ணெய் ஊற்றி மீண்டும் 2 மணி நேரம் வரை ஊறவிடவும்
 25. பின் உருட்டிய மாவை நன்கு பிசைந்து மெல்லியதாக தேய்க்கவும்
 26. பின் அதை விசிறி போல் மடித்து முறுக்கு போல் சுத்தி நடுவில் பிரிந்து வராமல் அழுத்தி விடவும்
 27. பின் சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்பு உள்ளங்கையால் மாவை சற்று சமப்படுத்தவும்
 28. பின் சூடான தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு நன்கு கோல்டன் நிறம் வரும் வரை சுட்டு எடுக்கவும்
 29. பின் சுட்ட எல்லா புரோட்டாவையும் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி நான்கு புறமும் கைகளால் நன்றாக அடித்து பின் தனித்தனியாக பரப்பி வைக்கவும்
 30. பொதுவாக கடையில் புரோட்டா செய்யும் போது ஒரு தடவை பார்த்தால் இந்த செய்முறை எல்லாம் நன்கு புரியும்
 31. சென்னா மசாலா:
 32. சுண்டலை 8 மணி நேரம் வரை ஊற விட்டு உப்பு சேர்த்து வேகவிடவும்
 33. இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் வெங்காயத்தை விழுதாக அரைத்து எடுக்கவும்
 34. பட்டை கிராம்பு ஏலக்காய் நெய்யில் வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்
 35. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்
 36. பின் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்
 37. பின் தூள் வகைகள் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
 38. பின் வேகவைத்த சுண்டல் மற்றும் தேவையான அளவு சுண்டல் வேகவைத்த தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
 39. நன்கு கொதித்ததும் பொடித்த பொடியை தூவி இறக்கவும்
 40. சில்லி புரோட்டா:
 41. ரெடியாக உள்ள புரோட்டாவை நறுக்கவும்
 42. வெங்காயம் மற்றும் குடைமிளகாயை சதுர துண்டுகளாக நறுக்கவும்
 43. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
 44. பின் குடைமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்
 45. பின் குழம்பு பொடி சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
 46. நன்கு கொதித்து சற்று சேர்ந்து வரும் போது நறுக்கிய புரோட்டா சேர்த்து நன்கு வதக்கவும்
 47. நன்கு சுருண்டு வந்ததும் இறக்கவும்
 48. விருப்பப்பட்டால் கேரட் துருவல் சேர்த்து வதக்கவும்
 49. விருந்திற்கு ஏற்ற டின்னர் காம்போ ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்