வீடு / சமையல் குறிப்பு / கருணைகிழங்கு ஷம்மி கபாப்

Photo of Yam Shammi Kebab by Menaga Sathia at BetterButter
311
0
0.0(0)
0

கருணைகிழங்கு ஷம்மி கபாப்

Jan-04-2019
Menaga Sathia
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கருணைகிழங்கு ஷம்மி கபாப் செய்முறை பற்றி

கருணைக்கிழங்கு பதில் காய்கள் சேர்க்கலாம்.பார்ட்டியில் பரிமாற ஏற்றது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • அப்பிடைசர்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கருணைகிழங்கு துண்டுகள் -1 கப்
  2. வேகவைத்த கடலைபருப்பு -1 கப்
  3. உப்பு-தேவைக்கு
  4. எண்ணெய் -1/2 கப்
  5. பொடியாக நறுக்கிய வெங்காயம் -1
  6. பொடியாக நறுக்கிய இஞ்சி-1 டீஸ்பூன்
  7. சோம்பு -1 டீஸ்பூன்
  8. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை -2 டேபிள் ஸ்பூன்
  9. சீரகபொடி -1/2 டீஸ்பூன்
  10. வரமிளகாய்தூள் -1 டீஸ்பூன்
  11. தனியாதூள் -1 டீஸ்பூன்
  12. ஏலக்காய் பொடி-1/4 டீஸ்பூன்
  13. பட்டை பொடி-1/4 டீஸ்பூன்
  14. எலுமிச்சை சாறு-1 டேபிள் ஸ்பூன்
  15. பொட்டுக்கடலை மாவு -1/3 கப்

வழிமுறைகள்

  1. கருணைகிழங்கை வேகவைத்து நீரை வடிக்கவும்.பின் மசித்து வைக்கவும்.
  2. கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சோம்பு சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. பின் வேகவைத்த கடலைபருப்பு,மசித்த கருணைகிழங்கு சேர்த்து நன்றாக கலக்கவும்.
  4. ஆறியதும் நைசாக அரைக்கவும்.
  5. அதனுடன் எண்ணெய் தவிர மற்ற பொருட்களை சேர்த்து பிசையவும்.
  6. கையில் எண்ணெய் தவிர சிறு உருண்டையா எடுத்து வட்டமாகவோ அல்லது நீளவடிவத்திலோ தட்டவும்.நான் வட்டமாக தட்டிவிட்டேன்.
  7. ஒரே அளவாக தட்டி வைக்கவும்
  8. கடாயில் எண்ணெய் ஊற்றி கபாப்களை சேர்த்து வேகவிடவும்.
  9. இருபக்கமும் பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.
  10. இதனை க்ரீன் சட்னி,இனிப்பு சட்னியுடன் பரிமாற நன்றாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்