வீடு / சமையல் குறிப்பு / நெய் சாதம் ,மட்டன் தால்சா ,நாட்டுக்கோழி வறுவல் மற்றும் சோள இனிப்பு பணியாரம்,இறால் ப்ரை,மட்டன் சூப்.

Photo of Ghee rice,mutton dalcha,nattu kozhi varuval,mutton soup,prawn fry,cholla sweet paniyaram by Shoba Jaivin at BetterButter
1050
0
3.0(0)
0

நெய் சாதம் ,மட்டன் தால்சா ,நாட்டுக்கோழி வறுவல் மற்றும் சோள இனிப்பு பணியாரம்,இறால் ப்ரை,மட்டன் சூப்.

Jan-07-2019
Shoba Jaivin
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

நெய் சாதம் ,மட்டன் தால்சா ,நாட்டுக்கோழி வறுவல் மற்றும் சோள இனிப்பு பணியாரம்,இறால் ப்ரை,மட்டன் சூப். செய்முறை பற்றி

ட்ரெடிஷனல் பார்ட்டி dishes

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. நெய் சாதம் செய்ய தேவையான பொருட்கள்
  2. பாஸ்மதி அரிசி தேவையான அளவு
  3. பெரிய வெங்காயம் ஒன்று
  4. பச்ச மிளகாய் நான்கு
  5. பட்டை கிராம்பு சோம்பு சீரகம் ஏலக்காய் தாளிக்க தேவையான அளவு
  6. தக்காளி பழம்
  7. நெய் தேவையான அளவு
  8. புதினா ஒரு கைப்பிடி
  9. உப்பு தேவையான அளவு
  10. மட்டன் தால்ச்சா செய்ய தேவையான பொருட்கள்
  11. மட்டன் அரை கிலோ
  12. கத்தரிக்காய் 4
  13. மாங்காய் ஒன்று
  14. சின்ன வெங்காயம் 10
  15. சாம்பார் பொடி 2 ஸ்பூன்
  16. கடலைப் பருப்பு 100 கிராம்
  17. உப்பு எண்ணெய் தேவையான அளவு
  18. கடுகு ஒரு ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன்
  19. மட்டன் சூப் செய்யத் தேவையான பொருட்கள்
  20. மட்டன்
  21. மிளகுத்தூள் 1 டீஸ்பூன்
  22. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  23. சீரகத்தூள் கால்ஸ்பூன்
  24. பெரிய வெங்காயம் 1 தக்காளி பழம் ஒன்று
  25. வெண்ணை ஒரு ஸ்பூன்
  26. உப்பு
  27. நாட்டுக்கோழி வறுவல் செய்ய தேவையான பொருட்கள்
  28. நாட்டுக்கோழி
  29. பெரிய வெங்காயம் ஒன்று
  30. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன்
  31. எண்ணை தேவையான அளவு
  32. கரம் மசாலா அரை ஸ்பூன்
  33. மிளகுத் தூள் ஒரு ஸ்பூன்
  34. உப்பு தேவையான அளவு
  35. இரால் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்
  36. இரால் தேவையான அளவு
  37. வெங்காயம் ஒன்று
  38. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  39. உப்பு எண்ணெய் தேவையான அளவு
  40. சோள பணியாரம் செய்ய தேவையான பொருள்கள்
  41. சோளம் ஒரு டம்ளர்
  42. முழு உளுந்து கால் டம்ளர்
  43. வெந்தயம் அரை ஸ்பூன்
  44. கருப்பட்டி தேவையான அளவு
  45. நெய் தேவையான அளவு
  46. உப்பு ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. நெய் சோறு செய்வதற்கு குக்கரில் நெய் விட்டு பட்டை கிராம்பு சோம்பு ஏலக்காய் சீரகம் தாளிக்கவும்
  2. வெங்காயம் பச்சை மிளகாய் புதினா வதக்கவும்
  3. தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  4. நன்கு கொதித்ததும் அரிசி சேர்த்து 2 விசில் விதமான சுற்றி வேகவிட்டு எடுக்கவும்
  5. மட்டன் தால்ச்சா செய்வதற்கு குக்கரில் மட்டனை வேக வைக்கவும்
  6. மெட்டல் பாத்திரத்தில் கத்தரிக்காய் முருங்கைக்காய் பருப்பு சேர்த்து நன்கு வேக விடவும்
  7. மஞ்சள் தூள் மிளகாய் தூள் சாம்பார் பொடி உப்பு சேர்க்கவும்
  8. காய்கறி நன்கு வெந்ததும் வேக வைத்த மட்டனை சேர்த்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்
  9. நாட்டுக்கோழி வறுவல் செய்வதற்கு குக்கரில் நாட்டுக்கோழி மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து 4 விசில் வேகவிடவும்
  10. கடாயில் எண்ணெய் வெங்காயம் இஞ்சி பூண்டு உப்பு சேர்த்து வதக்கவும்
  11. நன்கு வதங்கியதும் வேக வைத்து வைத்துள்ள நாட்டுக்கோழி மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து சுருள வரும் வரை வேக விட்டு எடுக்கவும்
  12. மட்டன் செய்வதற்கு குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வேகவிடவும்
  13. பெண் நன்கு வெந்ததும் மிளகுத்தூள் சீரகத்தூள் கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்
  14. இறால் வருவல் செய்வதற்கு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  15. வெங்காயம் நன்கு வதங்கிய பின் சுத்தம் செய்து வைத்துள்ள இறால் உப்பு சேர்த்து சுருள வேக விட்டு எடுக்கவும்
  16. சோலை இனிப்பு பணியாரம் செய்வதற்கு
  17. சோளம் உளுந்து வெந்தயத்தை 6 மணி நேரம் ஊற விடவும்
  18. ஊற வைத்த அரிசி உளுந்தை அரைக்கவும்
  19. அதனுடன் நாட்டுச் சர்க்கரை ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒரு மணி நேரம் விடவும்
  20. பணியார கல்லில் நெய் தடவி மாவை ஊற்றி இரண்டு புறமும் வேக வைத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்