வீடு / சமையல் குறிப்பு / காளான் மன்சூரியன்

Photo of Mushroom manchurian by Priya Tharshini at BetterButter
320
0
0.0(0)
0

காளான் மன்சூரியன்

Jan-07-2019
Priya Tharshini
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

காளான் மன்சூரியன் செய்முறை பற்றி

காளான் வைத்து இந்தோசைனீஸ் முறையில் செய்யப்படும் மன்சூரியன் வகை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. எண்ணெய் - தேவைக்கு
  2. காளான் - 1 கப் நறுக்கியது
  3. சோள மாவு - 4 மேசைக்கரண்டி + 1/2 தேக்கரண்டி
  4. மைதா - 2 மேசைக்கரண்டி
  5. அரிசி மாவு - 1 தேக்கரண்டி
  6. இஞ்சு பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  7. கேஸ்மீரி மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
  8. தண்ணீர் - தேவைக்கு
  9. உப்பு - தேவைக்கு
  10. பூண்டு - 1 மேசைக்கரண்டி பொடியாக நறுக்கியது
  11. வெங்காயதாள் வெள்ளை பகுதி - 1 மேசைக்கரண்டி பொடியாக நறுக்கியது
  12. வெங்காயதாள் பச்சை பகுதி - 2 மேசைக்கரண்டி பொடியாக நறுக்கியது
  13. வெங்காயம் - 1/4 கப் பொடியாக நறுக்கியது
  14. குடமிளகாய் - 1/4 கப் கூயுப்பாக நறுக்கியது
  15. சோயா சாஸ் - 1/2 தேக்கரண்டி
  16. மிளகாய் சாஸ் - 1/2 தேக்கரண்டி
  17. தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி
  18. மிளகுதூள் - 1/4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் சோளமாவு , மைதா , அரிசிமாவு , இஞ்சு பூண்டு விழுது , மிளகாய் தூள், உப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து மாவை கலக்கவும்.
  2. அதில் நறுக்கிய காளான் சேர்க்கவும்.
  3. நன்கு கலக்கி 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
  4. கடாயில் எண்ணெய் சூடாக்கி காளானை பொறித்து எடுக்கவும்.
  5. வேறு கடாயில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் சூடாக்கி பூண்டு, வெங்காய தாள் வெள்ளை பகுதி சேர்க்கவும்.
  6. பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  7. பிறகு குடமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  8. சாஸ் வகை அனைத்தும் சேர்க்கவும்.
  9. நன்கு கலந்ததும் 1/2 தேக்கரண்டி சோள மாவை தண்ணீரில் கரைத்து சேர்க்கவும்.
  10. உப்பு மற்றும் மிளகுதூள் சேர்த்து கலக்கவும்.
  11. பொறித்த காளான் சேர்க்கவும்.
  12. நன்கு பிறட்டி பிறகு வெங்காயமதாள் பச்சை பகுதி சேர்த்து கலக்கவும்.
  13. காளான் மன்சூரியன் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்