ஸ்வீட்கார்ன் சிக்கன் சூப் | Sweetcorn chicken soup in Tamil

எழுதியவர் Asiya Omar  |  7th Jan 2019  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Sweetcorn chicken soup by Asiya Omar at BetterButter
ஸ்வீட்கார்ன் சிக்கன் சூப்Asiya Omar
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    45

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    10

    மக்கள்

1

0

ஸ்வீட்கார்ன் சிக்கன் சூப் recipe

ஸ்வீட்கார்ன் சிக்கன் சூப் தேவையான பொருட்கள் ( Ingredients to make Sweetcorn chicken soup in Tamil )

  • சிக்கன் வேக வைக்க:-
  • எலும்புடன் கூடிய சிக்கன் துண்டுகள் -1/2 கிலோ
  • மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது 1-2 தேக்கரண்டி
  • தேவைக்கு 1 லிட்டர் - தண்ணீர்
  • சுவைக்கு உப்பு
  • டின் ஸ்வீட் கார்ன் -250 கிராம்
  • பால் - 250 மில்லி(விரும்பினால்)
  • வெண்ணெய் அல்லது எண்ணெய் 1 மேஜைக்கரண்டி
  • ஸ்பிரிங் ஆனியன் - 3 எண்ணம்
  • கார்ன் ப்லோர் -5 மேஜைக்கரண்டி
  • வினிகர்- 2 தேக்கரண்டி
  • சோயா சாஸ் -2 தேக்கரண்டி
  • கிரீன் சில்லி சாஸ் -2 தேக்கரண்டி
  • மிளகு,உப்பு - தேவைக்கு.

ஸ்வீட்கார்ன் சிக்கன் சூப் செய்வது எப்படி | How to make Sweetcorn chicken soup in Tamil

  1. சிக்கன் ,உப்பு,மஞ்சள் தூள்,இஞ்சி பூண்டு விழுது தண்ணீர் சேர்த்து கொதிவரவும் சிம்மில் 20 நிமிடம் குக்கரில் வேகவைக்கவும். ஆவியடங்கியவுடன் சிக்கன் தனியாக எடுத்து உதிர்த்துக் கொள்ளவும்.
  2. சிக்கன் வேக வைத்த தண்ணீர் தனியாக வடிகட்டி வைக்கவும்.
  3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காய்த்தாள் போட்டு வதக்கி உதிர்த்த சிக்கன் சேர்த்து வதக்கவும்.
  4. அத்துடன் சிக்கன் ஸ்டாக் சேர்க்கவும்.கொதிவரவும் கார்ன் ப்லோர் 5 மேஜைக்கரண்டி,5 கப் தண்ணீரில் கரைத்து விடவும்.கொதிக்க விடவும்.அகப்பையைக் கொண்டு கொதி வரும் வரை கலக்கவும்.டின் ஸ்வீட் கார்ன் முத்துக்களை பல்சில் மிக்ஸி ஜாரில் இரண்டு சுற்று சுற்றி சேர்க்கவும்.
  5. வினிகர்,சோயா சாஸ்,காரத்திற்கு கிரீன் சில்லி சாஸ் சேர்க்கவும்( காரத்திற்கு) கலந்து விடவும். அடுப்பை அணைக்கவும்
  6. உப்பு சரி பார்க்கவும்.,மிளகுத்தூள் சேர்த்து கலந்து விடவும்.கெட்டியாக இருந்தால் கூட்டியோ குறைத்தோ கொதிக்கும் நீர் சேர்க்கலாம்.
  7. சுவையான என் வீட்டில் செய்யும் முறையில் ஸ்வீட்கார்ன் சிக்கன் சூப் தயார்.
  8. பவுலில் விட்டு பரிமாறவும்.
  9. சுவையான ஸ்வீட் கார்ன் சிக்கந் சூப் தயார்.
  10. இரவு டின்னர் பார்ட்டிக்கு செய்து அசத்துங்க.சிக்கன் பாப்கார்ன்,கபாப்,குபூஸ் அல்லது ப்ரெட் டோஸ்ட் உடன் பரிமாறவும்.

எனது டிப்:

விரும்பினால் பால் 250 மில்லி சேர்க்கலாம்.கிரீமியாக இருக்கும்.

Reviews for Sweetcorn chicken soup in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.