வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட்கார்ன் சிக்கன் சூப்

Photo of Sweetcorn chicken soup by Asiya Omar at BetterButter
364
0
0.0(0)
0

ஸ்வீட்கார்ன் சிக்கன் சூப்

Jan-07-2019
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட்கார்ன் சிக்கன் சூப் செய்முறை பற்றி

சூப் இல்லாமல் பார்ட்டியா,அதுவும் இந்தக் குளிருக்கு இந்த சூப்பரான சூப் பரிமாறினால் இதமாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • சிம்மெரிங்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. சிக்கன் வேக வைக்க:-
  2. எலும்புடன் கூடிய சிக்கன் துண்டுகள் -1/2 கிலோ
  3. மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
  4. இஞ்சி பூண்டு விழுது 1-2 தேக்கரண்டி
  5. தேவைக்கு 1 லிட்டர் - தண்ணீர்
  6. சுவைக்கு உப்பு
  7. டின் ஸ்வீட் கார்ன் -250 கிராம்
  8. பால் - 250 மில்லி(விரும்பினால்)
  9. வெண்ணெய் அல்லது எண்ணெய் 1 மேஜைக்கரண்டி
  10. ஸ்பிரிங் ஆனியன் - 3 எண்ணம்
  11. கார்ன் ப்லோர் -5 மேஜைக்கரண்டி
  12. வினிகர்- 2 தேக்கரண்டி
  13. சோயா சாஸ் -2 தேக்கரண்டி
  14. கிரீன் சில்லி சாஸ் -2 தேக்கரண்டி
  15. மிளகு,உப்பு - தேவைக்கு.

வழிமுறைகள்

  1. சிக்கன் ,உப்பு,மஞ்சள் தூள்,இஞ்சி பூண்டு விழுது தண்ணீர் சேர்த்து கொதிவரவும் சிம்மில் 20 நிமிடம் குக்கரில் வேகவைக்கவும். ஆவியடங்கியவுடன் சிக்கன் தனியாக எடுத்து உதிர்த்துக் கொள்ளவும்.
  2. சிக்கன் வேக வைத்த தண்ணீர் தனியாக வடிகட்டி வைக்கவும்.
  3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காய்த்தாள் போட்டு வதக்கி உதிர்த்த சிக்கன் சேர்த்து வதக்கவும்.
  4. அத்துடன் சிக்கன் ஸ்டாக் சேர்க்கவும்.கொதிவரவும் கார்ன் ப்லோர் 5 மேஜைக்கரண்டி,5 கப் தண்ணீரில் கரைத்து விடவும்.கொதிக்க விடவும்.அகப்பையைக் கொண்டு கொதி வரும் வரை கலக்கவும்.டின் ஸ்வீட் கார்ன் முத்துக்களை பல்சில் மிக்ஸி ஜாரில் இரண்டு சுற்று சுற்றி சேர்க்கவும்.
  5. வினிகர்,சோயா சாஸ்,காரத்திற்கு கிரீன் சில்லி சாஸ் சேர்க்கவும்( காரத்திற்கு) கலந்து விடவும். அடுப்பை அணைக்கவும்
  6. உப்பு சரி பார்க்கவும்.,மிளகுத்தூள் சேர்த்து கலந்து விடவும்.கெட்டியாக இருந்தால் கூட்டியோ குறைத்தோ கொதிக்கும் நீர் சேர்க்கலாம்.
  7. சுவையான என் வீட்டில் செய்யும் முறையில் ஸ்வீட்கார்ன் சிக்கன் சூப் தயார்.
  8. பவுலில் விட்டு பரிமாறவும்.
  9. சுவையான ஸ்வீட் கார்ன் சிக்கந் சூப் தயார்.
  10. இரவு டின்னர் பார்ட்டிக்கு செய்து அசத்துங்க.சிக்கன் பாப்கார்ன்,கபாப்,குபூஸ் அல்லது ப்ரெட் டோஸ்ட் உடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்