Photo of Aval / poha kesari by Priya Tharshini at BetterButter
549
0
0.0(0)
0

அவல் கேசரி

Jan-08-2019
Priya Tharshini
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அவல் கேசரி செய்முறை பற்றி

அவலை ரவை போல் உடைத்து அதை வைத்து கேசரியாக செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அவல் - 1 கப்
  2. நெய் - 3 மேசைக்கரண்டி
  3. சக்கரை - 1 கப்
  4. ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
  5. முந்திரி - 1 மேசைக்கரண்டி
  6. திராட்சை - 1 மேசைக்கரண்டி
  7. கலர் பவுடர் - 1/4 தேக்கரண்டி
  8. தண்ணீர் - 2 கப்

வழிமுறைகள்

  1. 1 மேசைக்கரணடி நெய்யை சூடாக்கி முந்திரி , திராட்சையை பொன் நிறமாக வறுத்து எடுக்கவும்.
  2. அதே நெய்யில் அவல் சேர்த்து லேசாக வறுக்கவும். நிறம் மாற தேவையில்லை.
  3. அவலை மிக்ஸியில் போட்டு ரவை போல் அரைக்கவும்.
  4. வானலியில் தண்ணீர் மற்றும் கலர் பவுடர் சேர்த்து கொதிக்க விடவும்.
  5. தண்ணீர் கொதித்ததும் அவல் சேர்த்து கலறவும்.
  6. தண்ணீர் வற்றியதும் சக்கரை சேர்த்து கலறவும்.
  7. சக்கரை நன்கு கரைந்து இருகியதும் மீதம் உள்ள நெய்யை சேர்க்கவும்.
  8. வருத்த முந்திரி திராட்சையை சேர்க்கவும்.
  9. பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் அடுப்பை அனைக்கவும். அவல் கேசரி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்