வீடு / சமையல் குறிப்பு / மிளகாய் உருளைக்கிழங்கு பஜ்ஜி

Photo of Chilli with potato bajji by sudha rani at BetterButter
669
0
0.0(0)
0

மிளகாய் உருளைக்கிழங்கு பஜ்ஜி

Jan-08-2019
sudha rani
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மிளகாய் உருளைக்கிழங்கு பஜ்ஜி செய்முறை பற்றி

டெல்லியில் மிகவும் பிரபலமான பஜ்ஜி மிளகாய் உடன் உருளைக்கிழங்கு மசாலா ஸ்டப் செய்து சுடப்படும் ஒரு ருசியான ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பஜ்ஜி மிளகாய் 5
  2. உருளைக்கிழங்கு 6
  3. சின்ன வெங்காயம் 1 கப்
  4. இஞ்சி விழுது 1/4 ஸ்பூன்
  5. பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
  6. பச்சை மிளகாய் விழுது 1/4 ஸ்பூன்
  7. கறிவேப்பிலை சிறிது
  8. கொத்தமல்லி தழை சிறிது
  9. மல்லித்தூள் 1/4 ஸ்பூன்
  10. சீரகத்தூள் 1/4 ஸ்பூன்
  11. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  12. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  13. சோம்பு தூள் 1/4 ஸ்பூன்
  14. பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
  15. உப்பு தேவையான அளவு
  16. எண்ணெய் பொரிப்பதற்கு
  17. மாவு கரைசல்:
  18. கடலைமாவு 1 கப்
  19. மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
  20. பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்
  21. உப்பு தேவையான அளவு
  22. தண்ணீர் தேவையான அளவு
  23. சோடா உப்பு 2 சிட்டிகை

வழிமுறைகள்

  1. மாவு கரைசல்:
  2. கடலைமாவுடன் உப்பு மிளகாய்த்தூள் பெருங்காயத்தூள் மற்றும் சோடா உப்பு சேர்த்து ஒரு முறை ஜலிக்கவும்
  3. பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்
  4. உருளைக்கிழங்கு மசாலா:
  5. உருளைக்கிழங்கை கழுவி விட்டு இரண்டு துண்டுகளாக நறுக்கி ஆவியில் வேக வைத்து எடுத்து மசித்து வைக்கவும்
  6. அதாவது தண்ணீரில் நேரடியாக போடாமல் நறுக்கிய கிழங்கை வேறு ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைத்து கொதிக்கும் நீரில் வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும் அப்போது தான் கிழங்கு அதிக தண்ணீர் இல்லாமல் நன்றாக இருக்கும்
  7. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் கறிவேப்பிலை நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  8. பின் இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் விழுது மற்றும் தூள் வகைகள் சேர்த்து நன்கு வதக்கவும்
  9. பின் உதிர்த்த கிழங்கை சேர்த்து நன்கு வதக்கவும்
  10. கிழங்கை மசாலா உடன் சேர்த்து நன்கு வதக்கவும்
  11. பின் கிழங்கை நன்கு சுருள வதக்கி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
  12. பஜ்ஜி மிளகாயை எடுத்து கழுவி சுத்தம் செய்து நன்கு துடைத்து வைக்கவும்
  13. பின் அதில் கத்தி கொண்டு நடுவில் நீள வாக்கில் கீறி உள்ளே இருக்கும் விதையை நீக்கி விடவும்
  14. பின் ரெடியாக உள்ள உருளைக்கிழங்கு மசாலாவை உள்ளே மெதுவாக நிரப்பவும்
  15. அடிப்பாகம் கீறல் விழாமல் மிகவும் மெதுவாக நிரப்பவும்
  16. பின் ரெடியாக கரைத்து வைத்துள்ள மாவில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்