வீடு / சமையல் குறிப்பு / ஸ்பெஷல் பார்ட்டி மெனு வித் சீஸ்

Photo of Special Yummy Party Menu With Chees by Gayathri Gopinath at BetterButter
539
4
0.0(0)
0

ஸ்பெஷல் பார்ட்டி மெனு வித் சீஸ்

Jan-08-2019
Gayathri Gopinath
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்பெஷல் பார்ட்டி மெனு வித் சீஸ் செய்முறை பற்றி

வெண்ணிலா மில்க் ஷேக் , சீஸி ஆம்லெட் , சீஸி பிரன்ச் பிரைஸ் , சிக்கன் சீஸ் பாஸ்தா , சிக்கன் சாட்டே வித் டிப் பீனட் சாஸ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • பான் பிரை
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1.வெண்ணிலா மில்க் ஷேக்
  2. வெண்ணிலா எசென்ஸ் 1\4 மேஜைகிரண்டி
  3. வெண்ணிலா ஐஸ் கிரீம் 3 ஸ்கூப்
  4. சர்க்கரை 1 மே.கி
  5. பால் காய வைத்தது 1டம்ளர்
  6. 2.சிக்கன் சாட்டே
  7. சிக்கன் 200கி எலும்பு நீக்கியது
  8. சோயா சாஸ் 2 மே.கி
  9. வினிகர் 2மே.கி
  10. வெல்லம் 1\2மே.கி
  11. தேங்காய் பால் 2மே.கி
  12. மிளகாய் தூள் 2மே.கி
  13. மல்லி தூள் 1 மே.கி
  14. சீரக தூள் 1 மே.கி
  15. 3.பீனட் சாஸ்
  16. வேர்க்கடலை 50கி
  17. பூண்டு 6 பல் பொடியாக நறுக்கியது
  18. எண்ணெய் 4 மே.கி
  19. வெல்லம்2 மே.கி
  20. மிளகாய் தூள் 2 மே.கி
  21. மல்லி தூள்1மே.கி
  22. சீ.தூள்1\2 மே.கி
  23. தேங்காய் பால் 3மே.கி
  24. 4.சிக்கன் சீஸ் பாஸ்தா
  25. சிக்கன் 10 துண்டு
  26. பாஸ்தா 200கி
  27. காய வைத்த பால் 1 டம்ளர்
  28. கான் பிளார் 2 மே.கி
  29. சில்லி பிளக்ஸ் 1 மே.கி
  30. பட்டர் 3மே.கி
  31. மிக்ஸ்டு ஹேர்ப்ஸ் 1மே.கி
  32. மிளகு தூள் 1 மே.கி
  33. சர்க்கரை 2 மே.கி
  34. தக்காளி சாஸ் 2 மே.கி
  35. சீஸ் 4 மே.கி
  36. 5.சீஸி ஆம்லெட்
  37. முட்டை 2
  38. சீஸ்
  39. மிளகு தூள் மஞ்சள் தூள் உப்பு கலவை 2மே.கி
  40. ஹேர்ப்ஸ் 1 மே.கி
  41. 6.சீஸி பிரென்ச் பிரைஸ்
  42. உருளை கிழங்கு 2 நீள வாக்கில் வெட்டியது
  43. கான் பிளார் 2 மே.கி
  44. உப்பு

வழிமுறைகள்

  1. வெண்ணிலா மில்க் ஷேக் செய்ய தேயைான அனைத்து பொருட்களையும் ஜாரில் போட்டு 4 நிமிடம் அடித்து டம்ளரில் ஊற்றவும்
  2. ஐஸ்கிரீம் 1 ஸ்கூப் வைத்து கொடுக்கவும்
  3. 2.சிக்கன் சாட்டே செய்ய தேவையான அனைத்து பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் போட்டு மிக்ஸ் செய்து சிக்கன் துண்டுகளை போட்டு 2 மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்
  4. சாட்டே குச்சியில் இவ்வாறு செட் செய்யவும்
  5. தவாவில் எண்ணெய் 1மே.கி ஊற்றி இவ்வாறு 5 நிமிடம் இரண்டு பக்கமும் சுட்டு எடுக்கவும் .
  6. 3.பீனட் சாஸ் செய்ய வானலியில் 3மே.கி எண்ணெய் ஊற்றி பொடியாக நறக்கிய பூண்டு பற்களை சேர்க்கவும்
  7. 2 நிமிடம் வதக்கிய பின் வேர்க்கடலை பொடியினை சேர்க்கவும்
  8. 2 நிமிடம் கிளறி பின் சோயா சாஸ் வினிகர் சேர்க்கவும். பின் தேவையான அனைத்து பொருட்களையும் சேர்த்து சேர்த்து 3 நிமிடம் கிளறவும்
  9. தேங்காய் பால் சேர்த்து 3 நிமிடம் கிளறவும்
  10. 3மே.கி எண்ணெய் ஊற்றி 4 நிமிடம் எண்ணெய் பிரியும் வரை கிளறவும்.
  11. பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்
  12. 4.சிக்கன் சீஸ் பாஸ்தா செய்ய பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து 2மே.கி எண்ணெய் ஊற்றி பாஸதாவை வேக வைக்கவும்
  13. வெந்ததும் வடிகட்டி குளிர்ந்த நீரில் அலசி கொள்ளவும்
  14. வானலியில் 1மே.கி பட்டர் விட்டு சிக்கன் துண்டுகளை போட்டு உப்பு மிளகு தூள் சிறிது.சேர்த்து 5 நிமிடம் வதக்கி எடுத்து வைக்கவும்
  15. அதே வானலியில் 3 மே.கி பட்டர் விட்டு உருகியதும் மைதா போட்டு கிளறவும் . பின் காய வைத்த பாலை சிறிது சிறிதாக சேர்க்கவும்
  16. பின் தேவையான பொருட்களில் கொடுக்க பட்ட அனைத்து பொருட்களையும் சேர்த்து கிளறவும்
  17. சீஸ் மற்றும் ஸ்லைஸ் போட்டு மிக்ஸ் செய்யவும்
  18. சாஸ் பதத்திற்கு வந்ததும் பாஸதாவை போட்டு கிளறவும்
  19. கடைசியாக வைத்த சிக்கன் துண்டுகளை போட்டு கிளறி இறக்கவும்
  20. 5.சீஸி ஆம்லெட் செய்ய தவாவில் சறிது எண்ணெய் ஊற்றி 2 முட்டைகளை உடைத்து ஊற்றி மேல் மிளகு மஞ்சள் உப்பு கலவை 2 மே.கி தூவி 1 நிமிடம் பின் துருவிய சீஸை 1மே.கி தூவி மூடி போட்டு 3 நிமிடம் வேக விட்டு பிளேட் செய்யவும்
  21. 6. சீஸி பிரென்ச் பிரைஸ் செய்ய உருளை கிழங்கை தோலை நீக்கி அலசி பின் நீள வாக்கில் வெட்டி அதை டிஷூ பேப்பர் வைத்து நன்கு துடைத்து கொள்ளவும் .
  22. பின் கான் பிளார் சேர்த்து மிக்ஸ் செய்து குலுக்கி நன்கு காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  23. ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து அதில் சீஸ் உள்ள மற்றொரு கிண்ணத்தை வைத்து சீஸை உருக்கி பிரைசில் மேல் ஊற்றி கொடுக்கவும்
  24. அருமையான சீஸி ரெஸ்டாரன்ட் டைப் பிரைஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்