Photo of Benne Chakli or Murukku by Nandita Shyam at BetterButter
2248
238
4.4(0)
0

முருக்கு

Aug-11-2016
Nandita Shyam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
15 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • கண்டிமென்ட்ஸ்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 15

  1. அரிசி மாவு - 4 கப் (எனது கப் 80மிலி)
  2. உளுந்து - 1 கப்
  3. உப்பு - 1 தேக்கரண்டி அல்லது சுவைக்கேற்ற அளவு
  4. பெருங்காயம் - ஒரு பெரிய சிட்டிகை
  5. மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
  6. சீரகம் - 1 தேக்கரண்டி
  7. வெண்ணெய் - 2 தேக்கரண்டி, உருக்கியது
  8. பொரிப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. 1-1/4 கப் தண்ணீரில் 3-4 விசில்களுக்கு அல்லது முற்றிலுமாக வேகுவதற்கு உளுந்தை பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். பருப்பை மசித்து எடுத்து வைக்கவும்.
  2. ஒரு பெரிய கிண்ணத்தில், அரிசி மாவு உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம், சீரகம், வெண்ணெயோடு சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  3. வேகவைத்த உளுந்தைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்க. கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து மென்மையான ஆனால் கெட்டியான மாவாக இல்லாமல் தயாரித்துக்கொள்ளவும். மாவை 4-5 சம பாகங்களாகப் பிரித்து எடுத்து வைக்கவும்.
  4. சிறிது எண்ணெய் எடுத்து முறுக்கு அச்சின் உட்புறத்தில் எண்ணெய் தடவி ஒற்றை நட்சத்திர ஓட்டையுள்ள ஒரு தட்டை பொறுத்தவும்.
  5. ஒரு பங்கு மாவை அச்சில் வைத்து எண்ணெய் தடவியத் தாளில் மாவை அழுத்தவும். சுருள்களைப் பெற அச்சியை சுற்றவும்.
  6. பிளாஸ்டிக் ஷீட்டிலிருநது பிழிந்த மாவை எடுத்துச் சூடான எண்ணெயில் விடவும். உயர் தீயில் ஒரு நிமிடம் முறுக்கை பொரிக்கவும். தீயை அடக்கி பொன்னிறமாகும்வரை ஒரு நிமிடம் பொரிக்கவும்.
  7. பொரித்த முறுக்கைச் சூடான எண்ணெயிலிருந்து எடுத்து பேப்பர் துண்டில் வடிக்கட்டிக்கொள்க. மீதமுள்ள மாவுக்கும் இப்படியே செய்து சூடானக் காபி அல்லது டீயுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்