வீடு / சமையல் குறிப்பு / முளைகட்டிய கேழ்வரகு லட்டு

Photo of Sprouted Ragi Laddu by Bena Aafra at BetterButter
579
1
0.0(0)
0

முளைகட்டிய கேழ்வரகு லட்டு

Jan-10-2019
Bena Aafra
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முளைகட்டிய கேழ்வரகு லட்டு செய்முறை பற்றி

சத்தான உணவு.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேழ்வரகு 200 கிராம்
  2. வேர்க்கடலை பருப்பு 200 கிராம்
  3. வெல்லம் 200 கிராம்

வழிமுறைகள்

  1. கேழ்வரகை சுத்தம் செய்து 6 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
  2. பின்பு அவற்றில் தண்ணீரை வடித்துவிட்டு வெள்ளை துணியில் போட்டு இறுக கட்டிக் கொள்ளவும்.
  3. அவற்றை ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி இருட்டில் வைத்து முளைகட்டி வைத்து கொள்ளவும்.
  4. பின்பு அவற்றை காய வைத்து பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.
  5. இப்பொழுது ராகி மாவை இட்லி பாத்திரத்தில் வைத்து புட்டு போல் செய்து கொள்ளவும்.
  6. வேர்க்கடலையை ஒன்றிரண்டாக நன்றாக துடைத்துக் கொள்ளவும்.
  7. வெல்லத்தை நன்றாக தட்டி எடுத்துக்கொள்ளவும்.
  8. வேகவைத்த கேழ்வரகு புட்டு உடன் உடைத்த வேர்க்கடலை மற்றும் வெல்லம் சேர்க்கவும்.
  9. மூன்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  10. அவற்றை உருண்டையாக பிடித்து லட்டு போல் செய்து கொள்ளவும்.
  11. சத்தான முளைகட்டிய கேழ்வரகு லட்டு தயார்.
  12. அவற்றில் மேலே முந்திரி பாதாம் வைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்