Photo of Paneer 65 by Jayasakthi Ekambaram at BetterButter
314
0
0.0(0)
0

பனீர் 65

Jan-10-2019
Jayasakthi Ekambaram
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பனீர் 65 செய்முறை பற்றி

பனீரில் காரம் மசாலா கலந்து எண்ணெயில் பொரித்து செய்யும் ஒரு ஸ்னாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பனீர் 200 கிராம்
  2. அரிசி மாவு 2 ஸ்பூன்
  3. கார்ன் ஃப்ளார் 2 ஸ்பூன்
  4. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  5. மிளகுத்தூள் அரைஸ்பூன்
  6. கரம் மசாலா அரை ஸ்பூன்
  7. உப்புத்தூள் முக்கால் ஸ்பூன்
  8. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன்
  9. எலுமிச்சைச் சாறு ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பனீரைத் தண்ணீரில் அலசி பிறகு சிறிய சிறிய துண்டுகளாக வெட்டவும்
  2. ஒரு கிண்ணத்தில் கார்ன்ஃப்ளார் அரிசி மாவு மிளகாய் தூள் மிளகு தூள் கரம் மசாலா தூள் உப்பு தூள் இஞ்சி பூண்டு பேஸ்ட் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளவும்
  3. எலுமிச்சை சாறு அதில் ஊற்றிக் கொள்ளவும் தண்ணீரை சிறிது சிறிதாக கலந்து ஒரு பேஸ்ட் மாதிரி செய்து கொள்ளவும்
  4. பனீரை மாவு கலவையில் புரட்டி ஃப்ரிட்ஜில் 30 நிமிடங்கள் வைக்கவும்
  5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணையை சூடு படுத்தவும்
  6. நன்றாக ஊறிய பனீர் துண்டுகளை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  7. பரிமாறும் தட்டுக்கு மாற்றவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்