வீடு / சமையல் குறிப்பு / பன்னாட்டு விருந்து( அசைவம்)

Photo of International feast ( non -veg) by Karuna pooja at BetterButter
648
3
0.0(0)
0

பன்னாட்டு விருந்து( அசைவம்)

Jan-10-2019
Karuna pooja
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பன்னாட்டு விருந்து( அசைவம்) செய்முறை பற்றி

புது முயற்சியாக பல நாட்டு உணவுகளும் செய்முறைகளை இந்தத் தொகுப்பில் காண்போம்.1) சிங்கபூர் மூங்கில் பிரியாணி,2) கொரியா வறுத்த தேன் கோழி,3). அமெரிக்கா வெண்ணை எழுமிச்சை கிர்ல்டு மீன்,4). இத்தாலிய திரமிசு(இனிப்பு)

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கடினம்
  • டின்னெர் பார்ட்டி
  • மிடில் ஈஸ்டர்ன்
  • ஷாலோ ஃபிரை
  • கிரில்லிங்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மட்டன் 1/2 கிலோ
  2. பச்சை நிற இளம் மூங்கில் 1
  3. கோழி 1/2 கிலோ
  4. மீன் 4 துண்டுகள்​
  5. பாஸ்மதி அரிசி அரை கிலோ
  6. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  7. புதினா ஒரு கைப்பிடி அளவு
  8. மல்லி ஒரு கைப்பிடி அளவு
  9. வெங்காயம்-2
  10. உப்பு தேவையான அளவு
  11. கரம் மசாலா பொடி 1 டீஸ்பூன்
  12. முந்திரி-10
  13. ஏலக்காய்-2
  14. பட்டை -1
  15. அன்னாசிப்பூ 2
  16. கிராம்பு-2
  17. மஞ்சள் தூள் சிறிதளவு
  18. பிரியாணி இலை-1
  19. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  20. தயிர் ஒரு சிறிய கப்
  21. எலுமிச்சம்பழ சாறு 1 டீஸ்பூன்
  22. சோள மாவு 1 கப்
  23. மைதா மாவு 1/2 கப்
  24. சர்க்கரை 1 டீஸ்பூன்
  25. இன்ஸ்டன்ட் காபி பவுடர் 1 டீஸ்பூன்
  26. வெண்ணிலா எசன்ஸ் 1 டீஸ்பூன்
  27. க்ரீம் ஒரு கப்
  28. ஸ்பாஞ்ச் கேக் 16 துண்டுகள்
  29. கண்டன்ஸ்டு மில்க் 1/2 கப்
  30. பூண்டு நறுக்கியது 10 பல்
  31. வெள்ளரி விதை சிறிதளவு
  32. தேன் 1 டீஸ்பூன்
  33. சமையல் எண்ணெய் 100 மில்லி
  34. வெண்ணெய் 50 கிராம்
  35. பொடித்த மிளகு 2 ஸ்பூன்
  36. நறுக்கிய சிலரி சிறிதளவு

வழிமுறைகள்

  1. முதலில் நாம் செய்வது மூங்கில் பிரியாணி. மட்டனில் சிறிதளவு தண்ணீர் விட்டு மல்லித்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு பாதியளவு சேர்த்து வேக விடவும்
  2. மூங்கில் வெட்டி அதனை சுத்தம் செய்து ஒரு ஸ்பூன் எண்ணையை சுற்றி தடவி வைக்கவும்
  3. பாஸ்மதி அரிசியில் எண்ணெயில் பொரித்த பட்டை கிராம்பு ஏலக்காய் அன்னாசி பூ பிரியாணி இலை முந்திரி இவற்றை சேர்க்கவும்
  4. எண்ணெயில் பொரித்த வெங்காயத்தை சேர்க்கவும்
  5. புதினா மல்லி சேர்க்கவும்
  6. வேகவைத்த மட்டன் சேர்க்கவும்
  7. கரம் மசாலா சேர்க்கவும்
  8. மிளகாய் தூள் சிறிதளவு சேர்க்கவும்
  9. மஞ்சள் தூள் சிறிதளவு சேர்க்கவும்
  10. இவற்றை நன்கு கலந்து விடவும்
  11. தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
  12. தயிர் சேர்த்து மீண்டும் ஒரு முறை கலந்து வைக்கவும்
  13. இதனை சுத்தம் செய்து வைத்துள்ள மூங்கிலில் நிரப்பவும்
  14. மைதா மாவினை சப்பாத்தி மாவு போல தயார் செய்து வைக்கவும்
  15. மைதா மாவினை மூங்கிலின் முன் பகுதியை சுற்றி அடைக்கவும்
  16. இதனை விறகு அடுப்பில் வைத்து நன்கு வேக விடவும்
  17. 30 நிமிடம் வேகவிட்டு எடுத்தால் மூங்கில் பிரியாணி தயார்
  18. பிரியாணி ஃபிரைடு சிக்கன் செய்வதற்கு சிக்கன் துண்டுகளின் மீது மிளகு தூள், உப்பு,கான் மாவு ,மைதா மாவு சிறிது சேர்த்து கலந்து வைக்கவும்.
  19. பின்பு இதனை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  20. ஒருமுறை பொரித்து எடுத்து சிக்கனை மறுமுறையும் பொரித்து எடுக்கவும்
  21. கடாயில் எண்ணெய் விட்டு
  22. நறுக்கிய பூண்டு சேர்க்கவும்
  23. பூண்டு நன்கு வதங்கியதும் தேன் சேர்க்கவும்
  24. பொரித்து சிக்கனை சேர்க்கவும் விரும்பினால் சிறிது சர்க்கரையும் சேர்க்கலாம்
  25. சிக்கன் நன்கு வதங்கியதும் வெளியேறி விதைகளை சேர்த்து இறக்கவும்
  26. அடுத்து அமெரிக்கா மீன் செய்வதற்கு ஒரு தட்டில் மைதாமாவு சிறிது சோள மாவு சிறிது மிளகு தூள் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்
  27. இந்த மாவில் மீன் துண்டுகளை பிரட்டவும்
  28. அனைத்து பக்கங்களும் படும்படி நன்கு பிரட்டி வைக்கவும்
  29. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு மீனை இரண்டு புறமும் சுட்டுடவும்
  30. மீன் வெந்து நிறம் மாறியதும் வெண்ணெய் சேர்க்கவும்
  31. வெண்ணெய் நன்கு உருகி சாஸ் போல ஆனபின்பு சிலரியை சேர்க்கவும்
  32. இறக்குவதற்கு முன்பு சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து இறக்கவும்.
  33. இத்தாலியன் திரமிசு செய்வதற்கு கீரிமில் ,கண்டன்ஸ்டு மில் .வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலந்து வைக்கவும்
  34. ஒரு கண்ணாடி கோப்பையில் முதலில் வெண்ணிலா கேக்கில் வட்டவடிவ துண்டு வைக்கவும்
  35. சர்க்கரை பாகு சிறிதளவு செய்து வைக்கவும்
  36. சிறிதளவு வெந்நீரில் காப்பி பவுடரை கலந்து வைக்கவும்
  37. கேக் மீது சர்க்கரை பாகு சேர்க்கவும்
  38. காபி சிறிதளவு சேர்க்கவும்
  39. கேக் என்மீது கலந்து வைத்துள்ள கிரீமை ஒரு லேயர் போல வைக்கவும்
  40. மீண்டும் ஒரு கேக் துண்டை வைத்து
  41. அதன் மீது காபி சிறிதளவு சேர்க்கவும்
  42. சர்க்கரை பாகு சேர்க்கவும்
  43. மீண்டும் கிரீமை வைத்து காபி தூளை மேலே தூவி அலங்கரித்து பரிமாறவும்.
  44. பன்னாட்டு விருந்து தயார்....,

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்