வீடு / சமையல் குறிப்பு / சப்பாத்தி வெஜ் கோன்ஸ்

Photo of Chapathi Veg. Cones by Jayasakthi Ekambaram at BetterButter
280
1
0.0(0)
0

சப்பாத்தி வெஜ் கோன்ஸ்

Jan-11-2019
Jayasakthi Ekambaram
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சப்பாத்தி வெஜ் கோன்ஸ் செய்முறை பற்றி

சப்பாத்தியை கோன் மாதிரி செய்து அதன் உள்ளே வெஜிடபிள்ஸ் வைத்து எண்ணெயில் பொரிக்கும் ஒரு ஸ்னாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சப்பாத்தி 3
  2. கேரட் ஒன்று
  3. பீன்ஸ் 10
  4. வெங்காயம் ஒன்று
  5. பச்சை மிளகாய் ஒன்று
  6. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  7. கரம் மசாலா தூள் அரை ஸ்பூன்
  8. உப்புத் தூள் அரை ஸ்பூன்
  9. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  10. எண்ணெய் தேவையான அளவு
  11. மைதா மாவு 100 கிராம்
  12. டொமேட்டோ சாஸ் 6 ஸ்பூன்
  13. ஓமப் பொடி 6ஸ்பூன்
  14. கொத்தமல்லி தழை அரை கைப்பிடி அளவு

வழிமுறைகள்

  1. வெங்காயம் பீன்ஸ் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. கேரட்டையும் இஞ்சியையும் துருவிக்கொள்ளவும்
  3. விதை நீக்கி பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  4. அடுப்பில் வாணலியை வைத்து 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு இஞ்சி பச்சை மிளகாய் தாளிக்கவும்
  5. பிறகு வெங்காயம் கேரட் பீன்ஸை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்றாக வதக்கவும்
  6. மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு தூள் சேர்த்துக் கொள்ளவும்
  7. காய்கள் வேகும் வரை ஒரு ஐந்து நிமிடம் நன்றாக வதக்கவும்
  8. சிறிது தண்ணீர் சேர்த்து காய்களை வேக விடவும்
  9. ஒரு ஸ்பூன் மைதா மாவு தூவி கொள்ளவும்
  10. ஒரு கரண்டியால் நன்றாக சேர்ந்தாற்போல மசித்துக் கொள்ளவும்
  11. கொத்தமல்லித்தழை தூவி கொள்ளவும்
  12. இப்போது ஸ்டஃபிங் ரெடி
  13. சப்பாத்திகளை பாதி பாதியாக கட் செய்து கொள்ளவும்
  14. ஒரு கப் மைதா மாவு எடுத்து கொண்டு அதில் சிறிது தண்ணீர் கலந்து கெட்டியான பசை போல் செய்து கொள்ளவும்
  15. பாதி சப்பாத்தி எடுத்துக்கொண்டு அதன் ஓரங்களில் மைதா பேஸ்ட் தடவி கோன்மாதிரி மடிக்கவும்
  16. அதன் உள்ளே காய்கறி ஸ்டஃபிங் வைக்கவும்
  17. மேல் பகுதியில் மைதா பேஸ்ட் வைத்து மூடவும்
  18. இதேபோல் 3 சப்பாத்தி களையும் கோன் மாதிரி செய்து கொள்ளவும்
  19. அவற்றை சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  20. பொரித்தெடுத்த கோன்களின் மேல் பக்கத்தை தக்காளி சாஸில் முக்கி அதை ஓமப்பொடி மேல் புரட்டவும்
  21. அவற்றை தட்டில் அடுக்கி வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்