வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் பக்கோடா

Photo of Chicken pakora by rejaz shiya at BetterButter
321
1
0.0(0)
0

சிக்கன் பக்கோடா

Jan-12-2019
rejaz shiya
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் பக்கோடா செய்முறை பற்றி

இது சிக்கனை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வகை பக்கோடா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • ஈத்
  • சௌத்இந்தியன்
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. எலும்பில்லாத சிக்கன் அரை கிலோ
  2. மஞ்சள் பொடி சிறிது
  3. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  4. பச்சை மிளகு 1
  5. உப்பு தேவையான அளவு
  6. காஷ்மீரி சில்லி பவுடர் 1 டீஸ்பூன்
  7. கடலை மாவு முக்கால் கப்
  8. மல்லி இலை சிறிது
  9. எண்ணை பொரிப்பதற்கு தேவையான அளவு
  10. கரம் மசாலா கால் டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் எலும்பில்லாத சிக்கனை எடுத்து சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
  2. அத்துடன் பச்சை மிளகாய் சிறிது சிறிதாக நறுக்கி போடவும்
  3. மேலும் அதில் காஷ்மீரி சில்லி மற்றும் இஞ்சி பூண்டு விழுதினை போட்டு நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்
  4. உப்பு தேவையான அளவு போட்டு நன்றாக பிசையவும்
  5. பின்பு இதை 15 நிமிடம் நன்றாக ஊற வைக்கவும்
  6. 15 நிமிடம் கழிந்ததும் அதில் முக்கால் கப் கடலை மாவு மற்றும் கரம் மசாலா சேர்க்கவும்
  7. அத்துடன் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிய மல்லி இலை போட்டு நன்றாக கிளறவும்
  8. எண்ணை நன்றாக காய்ந்ததும் அதை ஒவ்வொரு சிறிய துண்டுகளாக எடுத்து பக்கோடா போல் பொரிக்கவும்
  9. மிதமான சூட்டில் வைத்து பொரிக்கவும்
  10. சுவையான மொறுமொறுப்பான சிக்கன் பக்கோடா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்