வீடு / சமையல் குறிப்பு / மாதுளை டீ, க்ரிஸ்பி த்ரெடட் சிக்கன், ஃப்ரூட் பன்ச், பப்பாளி கஸ்டர்ட் பார்ஃபைட்

Photo of Pomegranate tea, crispy threaded chicken, fruits punch, papaya vermicelli custard parfait by Rabia Hamnah at BetterButter
89
1
0.0(0)
0

மாதுளை டீ, க்ரிஸ்பி த்ரெடட் சிக்கன், ஃப்ரூட் பன்ச், பப்பாளி கஸ்டர்ட் பார்ஃபைட்

Jan-12-2019
Rabia Hamnah
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மாதுளை டீ, க்ரிஸ்பி த்ரெடட் சிக்கன், ஃப்ரூட் பன்ச், பப்பாளி கஸ்டர்ட் பார்ஃபைட் செய்முறை பற்றி

பார்ட்டிக்கு இப்படி செய்து அசத்துங்க

செய்முறை டாக்ஸ்

 • மீடியம்
 • டின்னெர் பார்ட்டி
 • கண்டிமென்ட்ஸ்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

 1. மாதுளை டீ :
 2. தேவையான பொருட்கள் :
 3. உதிர்த்த மாதுளை-2 கப்
 4. சீனி-1/2கப்
 5. சுடு தண்ணீர்- தேவைக்கு
 6. க்ரிஸ்பி த்ரெட் சிக்கன் (Crispy thread chicken) தேவையான பொருட்கள்:
 7. உருளை கிழங்கு-4 (வேக வைத்து மசித்தது)
 8. ப.பட்டானி-1கப் ( வேக வைத்தது)
 9. வெங்காயம்- 3 (பொடியாக நறுக்கியது)
 10. வேக வைத்த சிக்கன்-200 கிராம்
 11. இஞ்சி பூடு விழுது-2 ஸ்பூன்
 12. மிளகாய் பொடி-3 ஸ்பூன்
 13. கரம் மசாலா-1 ஸ்பூன்
 14. மஞ்சள் தூள்-1 ஸ்பூன்
 15. சீரக தூள்-2 ஸ்பூன்
 16. எண்ணெய்-தாளிக்க
 17. உப்பு- தேவைக்கு
 18. கோட்டிங்கிற்கு: முட்டை-2
 19. கார்ன் ஃப்ளார் பொடி-2 டேபிள் ஸ்பூன்
 20. மிளகு தூள்-1 ஸ்பூன்
 21. உப்பு-தேவைக்கு
 22. ஃப்ரூட்ஸ் பன்ச் செய்ய தேவையான பொருட்கள்:
 23. வாழைப்பழம் – 1/2 கப்,
 24. மாம்பழம் – 1/2 கப்,
 25. பப்பாளிப் பழம் – 1,
 26. மாதுளை முத்துகள் – 1/4 கப்,
 27. ஆப்பிள் – 1/2 கப்,
 28. இளநீர் – 2
 29. புதினா – 4 இலை,
 30. தேன் – 1 டேபிள்ஸ்பூன்.
 31. நன்னாரி-2 டேபிள் ஸ்பூன்
 32. Papaya Halwa vermicelli custard parfait செய்ய தேவையான பொருட்கள்
 33. பப்பாளி பழ துண்டுகள் : 3 கப்
 34. சர்க்கரை : 3/4 கப்
 35. நெய் : 4 தே. கரண்டி
 36. காய்ச்சின பால் : 1/2 கப்
 37. ஏலப்பொடி – சிறிதளவு
 38. முந்திரி – 7
 39. பாதாம் பருப்பு – 7

வழிமுறைகள்

 1. மாதுளை டீ செய்முறை முதலில் மாதுளம் பழத்துடன் சீனி சேர்த்து இடி உரலை வைத்து கொஞ்சம் நசுக்கி ஒரு பாட்டிலில் சேமித்து ஒரு மாதம்வரை ஃபிரிட்ஜில் வைத்து தேவைக்கு உபயோகப் படுத்தலாம்.
 2. 2 டேபிள் ஸ்பூன் மாதுளையுடன் 1 கப் சுடு நீர் சேர்த்து அருந்தி கொள்ளலாம். இனிப்பு கூடுதல் தேவைப் பட்டால் தேன் சேர்க்கலாம்.
 3. மாதுளை டீ தயார். சோர்வை அகற்றி புத்துணர்ச்சியை தூண்டும் இது. 
 4. க்ரிஸ்பி த்ரெட் சிக்கன் செய்முறை: ஒரு பாத்திரத்தை சூடு படுத்தி எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் வெங்காயம் போட்டூ வதக்கவும். இஞ்சி பூடு சேர்க்கவும். பச்சை வாசனை போக நன்கு வதக்கி உப்பு மற்றும் தூள் வகைகளை சேர்க்கவும்.
 5. பின்பு  சிக்கனை கையால் பிசைந்து சேர்க்கவும்.உ.கிழங்கு மற்றும் பட்டானியை சேர்த்து கிளறி மல்லி இலை சேர்த்து இறக்கவும்.    ரோலிற்கு தேவையான மசாலா தயார்.
 6. முட்டையை அடித்து வைத்து கொள்ளவும். முட்டையுடன்  கார்ன் ஃப்ளார் பொடி, மிளகு தூள்,உப்பு-தேவைக்கு சேர்த்து வைக்கவும்.
 7. சமோசா ஷீட்டை எடுத்து நீள நீளமாக வெட்டி வைத்துக் கொள்ளவும். பின்பு சிக்கன் கலவையை உருண்டையாகவோ சதுரமாகவோ பிடித்து முட்டை கலவையில் முக்கி வெட்டிய ஷீட் துண்டுகளை வைத்து சுற்றி எண்ணெயில் பொறித்து எடுக்கவும். சுவையான க்ரிஸ்பி த்ரெட் சிக்கன்  தயார்.
 8. ஃப்ரூட் பன்ச் செய்முறை : எல்லாப் பழவகைகளையும்  பொடியாக நறுக்கியோ அரைத்தோ புதினா, நன்னாரி, எலுமிச்சை சாறு,இளநீருடன் சேர்த்து கலக்கவும். பிறகு தேன் சேர்த்து கலக்கி பரிமாறவும்.
 9. வைட்டமின் ஏ சத்தும் இளநீரில் உள்ளது.
 10. Papaya custard parfait செய்முறை:
 11. செய்முறை: முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். பாதம் பருப்பை மெலிதாக நறுக்கிக்கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய்விட்டு பப்பாளி பழ துண்டுகளை போட்டு வதக்குங்கள். பச்சை வாடை போனதும் காய்ச்சின பாலை ஊற்றி நன்கு வேக விடவும். பப்பாளி குழைந்து வரும், அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளறி விடவும்.
 12. அல்வா சுண்டிவரும்போது மீதமுள்ள நெய்விட்டு கிளறிவரவும். பாத்திரத்தில் அல்வா ஒட்டாமல் வரும்பொது முந்திரி, பாதாம், ஏலப்பொடி தூவி கிளறி இறக்கவும். பப்பாளி பழ ஹல்வா தயார்.
 13. சேமியா கஸ்டர்ட்: 2 கிளாஸ் பாலுடன் 4 -5 டேபிள் ஸ்பூன் மில்க் மெய்ட் சேர்த்து காய்ச்சவும். பின்பு சேமியாவை சேர்த்து 2 சொட்டு வெனிலா எஸன்ஸ் சேர்த்து கொள்ளவும்.
 14. ஒரு கிண்ணத்தில் 3 டேபிள் ஸ்பூன் கார்ன் ஃப்ளாருடன் தண்ணீர் சேர்த்து கலந்து சேமியா கலவையில் சேர்த்து தேவைக்கு சீனி சேச்த்து ஆற விடவும்.
 15. பின்பு ஒரு கிளாஸில் பப்பாளி கலவை பின்பு சேமியா கஸ்டர்ட் என மூன்று நான்கு லேயராக வைத்து செர்ரி, டூட்டி ஃப்ரூட்டி வைத்து அலங்கரித்து ஃப்ரிட்ஜில் வைத்து கூலாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்