வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பால் புலாவ்

Photo of Coconut milk pulav by sudha rani at BetterButter
449
0
0.0(0)
0

தேங்காய் பால் புலாவ்

Jan-13-2019
sudha rani
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பால் புலாவ் செய்முறை பற்றி

விருந்தில் அதிக மசாலா இல்லாமல் மிகவும் அற்புதமான ருசியாக இருக்கும் அதவிட மிகவும் குறைந்த நேரத்தில் இதை செய்ய முடியும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாஸ்மதி அரிசி 1 கப்
  2. தேங்காய் பால் 2 கப்
  3. பச்சை மிளகாய் 6
  4. நெய் 1/2 கப்
  5. கொத்தமல்லி இலை 1 கைப்பிடி
  6. புதினா 1 கைப்பிடி
  7. உப்பு தேவையான அளவு
  8. தாளிக்க:
  9. பட்டை 2
  10. கிராம்பு 2
  11. ஏலக்காய் 2
  12. பிரியாணி இலை 2
  13. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  14. நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் 1 கப்
  15. அலங்கரிக்க:
  16. முந்திரி 50 கிராம்
  17. திராட்சை 25 கிராம்
  18. மாதுளை முத்துக்கள் 1/2 கப்
  19. கொத்தமல்லி தழை சிறிது

வழிமுறைகள்

  1. பாஸ்மதி அரிசியை ஒரு முறை அலசி பின் 20 நிமிடங்கள் வரை ஊறவிடவும்
  2. குக்கரில் 1/4 கப் விட சிறிது சேர்த்தி நெய் விட்டு சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்
  3. பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  4. பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் சிறிது புதினா கொத்தமல்லி தழை தூவி வதக்கவும்
  5. (இதற்கிடையில் ஊறவைத்த அரிசியை நன்கு வடிகட்டி 2 ஸ்பூன் நெய் விட்டு லைட்டாக வதக்கவும்)
  6. பின் வதக்கிய அரிசியை சேர்த்து சிறிது வதக்கி பின் தேங்காய் பால் விட்டு கலந்து கொள்ளவும்
  7. (சிறிது நெய்யில் முந்திரி திராட்சை சேர்த்து வதக்கி தனியாக வைக்கவும்)
  8. தேங்காய் பால் சற்று கொதிக்க ஆரம்பித்ததும் மீதமுள்ள நெய் மற்றும் புதினா கொத்தமல்லி தழை தூவி கலந்து மூடி வைத்து 1 விசில் வந்ததும் ஸ்ம்மில் 8 நிமிடங்கள் வரை வைத்து இறக்கவும்
  9. பின் குக்கரை திறந்து கிளறி மேலே முந்திரி திராட்சை கொத்தமல்லி தழை மற்றும் மாதுளை முத்துக்கள் சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்
  10. இந்த புலாவ் உதிரியா தேங்காய் பால் நெய் மணத்துடன் நன்றாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்