Photo of Gova poli by sudha rani at BetterButter
845
0
0.0(0)
0

கோவா போளி

Jan-13-2019
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கோவா போளி செய்முறை பற்றி

போளியிலே கொஞ்சம் ஸ்பெஷல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மேல் மாவு:
  2. மைதா 200 கிராம்
  3. உப்பு சிறிது
  4. நெய் 2 டேபிள்ஸ்பூன்
  5. எண்ணெய் 75 மில்லி
  6. திரட்ட:
  7. அரிசி மாவு 50 கிராம்
  8. பூரணம்:
  9. இனிப்பு சேர்த்த கோவா 150 கிராம்
  10. பொடித்த சர்க்கரை 1/2 கப்
  11. முந்திரி 10
  12. பாதாம் 10
  13. மைதா 50 கிராம்
  14. நெய் 3 ஸ்பூன்
  15. சுடுவதற்கு நெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மேல் மாவு:
  2. மைதா உடன் உப்பு சேர்த்து கலந்து நெய் விட்டு பிசிறி பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து எண்ணெய் விட்டு மூடி வைக்கவும்
  3. சுமார் ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
  4. பூரணம்:
  5. பாதாமை சுடுதண்ணீரில் ஊறவிட்டு தோல் உரித்து முந்திரி உடன் சேர்த்து அரைக்கவும்
  6. நெய் விட்டு சூடானதும் மைதா சேர்த்து வறுக்கவும்
  7. பச்சை வாசனை போனதும் கோவா சேர்த்து கிளறவும்
  8. பின் அரைத்த முந்திரி பாதாம் விழுது சேர்த்து வதக்கவும்
  9. பின் பொடித்த சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கவும்
  10. மேல் மாவை உருண்டை பிடித்து அரிசி மாவில் புரட்டி திரட்டவும்
  11. பின் பூரணம் வைத்து மடித்து மீண்டும் மெல்லியதாக தேய்க்கவும்
  12. பின் சூடான தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் நெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்