BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / ஸ்டப்ட் பாதுஷா

Photo of Stuped badhusa by sudha rani at BetterButter
0
0
0(0)
0

ஸ்டப்ட் பாதுஷா

Jan-13-2019
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

ஸ்டப்ட் பாதுஷா செய்முறை பற்றி

அதிக செலவு இல்லாத எளிதான ஸ்வீட்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • రాత్రి విందు
  • తమిళనాడు
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மேல் மாவு:
  2. மைதா 1 1/4 கப்
  3. வனஸ்பதி 50 கிராம்
  4. நெய் 1/2 டேபிள்ஸ்பூன்
  5. சோடா உப்பு 1/8 ஸ்பூன்
  6. சர்க்கரை பாகு:
  7. சர்க்கரை 1 1/2. கப்
  8. தண்ணீர் 3/4 கப்
  9. ஏலத்தூள் 1 ஸ்பூன்
  10. பூரணம்:
  11. முந்திரி 10
  12. திராட்சை 10
  13. பாதாம் 10
  14. வெள்ளரி விதை 2 ஸ்பூன்
  15. சாரப்பருப்பு 1 ஸ்பூன்
  16. கிர்னிபழ விதை 1 ஸ்பூன்
  17. பொடித்த சர்க்கரை 2 ஸ்பூன்
  18. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. வனஸ்பதி உடன் சோடா உப்பு மற்றும் நெய் சேர்த்து நன்கு குழைக்கவும்
  2. பின் மைதா சேர்த்து நன்கு பிசிறி விடவும்
  3. பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  4. சுமார் ஒரு அரை மணி நேரம் வரை ஊறவிடவும்
  5. பூரணம்:
  6. பொடித்த சர்க்கரை உடன் கரகரப்பாக உடைத்த நட்ஸ் ஐ கலந்து கொள்ளவும்
  7. வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்
  8. மாவை லெமன் அளவு உருட்டி நடுவில் குழி செய்து பூரணம் வைத்து மடித்து மீண்டும் உருட்டவும்
  9. பின் சூடான எண்ணெயில் போட்டு நிதானமாக பொரித்து எடுக்கவும்
  10. எண்ணெய் அளவான சூட்டில் இருக்க வேண்டும் இல்லையெனில் மேல் பகுதி நிறம் வரும் ஆனால் உள்ளே வேகாது
  11. ஒவ்வொரு ஈட்டிற்க்கும் 5 _6 மட்டும் போட்டு பொரித்து எடுக்கவும்
  12. மாவை போட்ட உடன் கரண்டி கொண்டு கிளற வேண்டாம் உடைந்து விடும்
  13. அதுவே எழும்பி வரும்
  14. முதலில் மாவை எண்ணெயில் போட்ட உடன் தீயை குறைத்து வைத்து பின் எடுப்பதற்கு முன் சிறிது தீயை அதிகரித்து பின் எடுத்தால் பதம் சரியாக இருக்கும்
  15. இது எல்லாம் பாதுஷா நன்றாக வர டிப்
  16. பொரித்து எடுத்த பாதுஷாவை சூடான சர்க்கரை பாகில் போட்டு 3 நிமிடங்கள் கழித்து எடுத்து தட்டில் அடுக்கவும்
  17. சர்க்கரை சிரப்:
  18. சர்க்கரை உடன் தண்ணீர் மற்றும் ஏலத்தூள் சேர்த்து நிதானமான தீயில் கொதிக்க விட்டு பிசுக்கு பதம் வந்ததும் இறக்கவும்
  19. இதுவே மேல் சுகர் கோட்டிங் வேண்டும் என்றால் சர்க்கரை சிரப்பை ஒரு கம்பி பதம் வந்ததும் இறக்கவும்
  20. அப்போது சர்க்கரை பூத்து இருக்கும்
  21. பாதுஷாவை சர்க்கரை சிரப்பில் ஊறவைப்பதற்கு முன் ஊசியால் சின்ன சின்ன துளை இடவும்
  22. அப்போது சர்க்கரை சிரப்பை நன்கு உறிஞ்சும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்