வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் கொத்து பரோட்டா

Photo of Chicken kothu parotta by rejaz shiya at BetterButter
1197
0
0.0(0)
0

சிக்கன் கொத்து பரோட்டா

Jan-13-2019
rejaz shiya
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் கொத்து பரோட்டா செய்முறை பற்றி

இதோ சுடச்சுட ஆவி பறக்கும் கொத்து புரோட்டா உங்களுக்காக

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • ஈத்
  • சௌத்இந்தியன்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பரோட்டா 8
  2. சிக்கன் சால்னா அரை கப்
  3. பெரிய வெங்காயம் 2
  4. பச்சை மிளகாய் 3
  5. கறிவேப்பிலை சிறிதளவு
  6. முட்டை 3
  7. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  8. எலும்பில்லாத சிக்கன் கால் கிலோ
  9. மஞ்சள் பொடி
  10. மிளகு பொடி தேவையான அளவு
  11. கரம் மசாலா சிறிது
  12. பெருஞ்சீரகப் பொடி கால் தேக்கரண்டி
  13. இதற்காக இஞ்சி-பூண்டு விழுது அரை ஸ்பூன்
  14. கொத்தமல்லி இலை சிறிது
  15. தேங்காய் எண்ணெய் 3 முதல் 4 வரை
  16. சிக்கன் பொரிக்க தேவையான சிறிதளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. முதலில் எலும்பில்லாத சிக்கனை எடுத்து நன்றாக கழுவி கொள்ள வேண்டும்
  2. பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் பொடி மிளகு பொடி பெசீரகப் பொடி உப்பு கரம் மசாலா
  3. போட்டு நன்றாகக் கிளறி அதை ஒரு ஐந்து நிமிடம் ஊற வைக்கவும்
  4. பின்பு பரோட்டாவை எடுத்து சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்
  5. ஒரு வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி அதில்
  6. ஏற்கனவே கலந்து வைத்த சிக்கனை போட்டு அரை வேக்காட்டில் பொரிக்க வேண்டும்
  7. ஒரு பாத்திரத்தில் 3 முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடிக்கவும் சிறிதளவு உப்பு போட்டு நன்றாக அடிக்கவும்
  8. பின்பு தனியே ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் அந்த முட்டை கலவையை போட்டு நன்றாகக் கிளற வேண்டும் இப்போ முட்டை வறுவல் ரெடி
  9. இதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
  10. சிக்கன் சால்னா அரை கப் எடுத்துக் கொள்ள வேண்டும்
  11. இப்படி வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்
  12. ஏற்கனவே உபயோகப்படுத்திய சிக்கன் எண்ணையை இப்போது கொத்துபரோட்டாவிற்கு உபயோகப்படுத்தலாம்
  13. எண்ணை நன்கு காய்ந்ததும் அதில் வெங்காயம் பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை போட்டு நன்றாக வதக்க வேண்டும்
  14. அத்துடன் சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது போட்டு உப்பு போட்டு நன்றாக வதக்கவும்
  15. நன்கு வதங்கியதும் அத்துடன் நாம் ஏற்கனவே தயார் பண்ணி வைத்திருந்த அந்த சிக்கனை போட்டு நன்றாக வதக்கவும்
  16. உப்பு சரி பார்த்து கொள்ளவும்
  17. இப்போது அது நன்கு வதங்கியவுடன் அத்துடன் நாம் கட் பண்ணி வைத்திருந்த அந்த பரோட்டாவை போட்டு நன்றாக கொத்த வேண்டும்
  18. மேலும் அதில் சால்னாவை போட்டு நன்றாக கொத்தவேண்டும்
  19. இப்போது ப்ரோட்டா மசியதொடங்கியவுடன் அதில் சிறிதளவு மல்லி இலையை தூவ வேண்டும்
  20. கடைசியாக இதில் நம் ஏற்கனவே வறுத்து வைத்திருந்த அந்த முட்டையை போட்டு நன்றாக கிளறவும்
  21. இப்போது சுவையான கொத்து பரோட்டா ரெடி
  22. நறுமணத்திற்காக மீண்டும் சில கருவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்