வீடு / சமையல் குறிப்பு / ஸ்மோக்டு லெமன் பஹடி சிக்கன்

Photo of Smoked Lemon Pahadi Chicken by Sai Priya at BetterButter
3246
57
4.3(0)
0

ஸ்மோக்டு லெமன் பஹடி சிக்கன்

Aug-14-2016
Sai Priya
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பாச்சிலர்ஸ்
  • ஹிமாச்சல
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் 400 கிராம்
  2. 2 கப் புதிய கொத்தமல்லி இலை
  3. 4 பச்சைமிளகாய்
  4. பூண்டு பல் 10
  5. மஞ்சள்தூள் 1/2 டீக்கரண்டி
  6. 2 தேக்கரண்டி வெண்ணெய்
  7. 1/4 கப் கெட்டியான தயிர்
  8. 1 டீக்கரண்டி எலும்பிச்சை சாறு
  9. 1 முழு எலுமிச்சை பழம்
  10. சுவைக்கேற்ப உப்பு

வழிமுறைகள்

  1. கொத்தமல்லி இலை, பூண்டு, பச்சைமிளகாய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து மென்மையாக அரைத்துக்கொள்ளவும். இதை சிக்கன் துண்டுகளுடன் சேர்த்து கலந்துக் கொள்ளவும். எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து குறைந்தது 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. கடாயியை சூடு செய்து ஊறவைத்த சிக்கனை மசாலாவுடன் சேர்த்து கடாயில் வைக்கவும். மிதமான தீயில் 12-15 நிமிடம் நன்றாக வேகவிடவும். பின் தீயை அணைத்து விடவும்.
  3. இப்போது சிறிய கிண்ணத்தை எடுத்து அதில் வெண்ணெய் ஊற்றி அதனை சிக்கன் கடாயில் நடுவில் வைக்கவும்.
  4. ஒரு முழு எழுமிச்சை பழத்தை நேரடியாக தீயில் வாட்டவும். பின் அதனை வெண்ணெய் கிண்ணத்தினுள் வைக்கவும். பின்பு உடனடியாக கடாயை மூடியைக் கொண்டு மூடவும். 2 நிமிடம் கழித்து எலுமிச்சை பழத்தை வெண்ணெயில் இருந்து வெளியே எடுத்து விடவும். அந்த வெண்ணையை சிக்கன் மீது ஊற்றி விடவும்.
  5. இதனை உணவுக்கு ஸ்டார்டராக அல்லது சைட் டிஷ் ஆக பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்