வீடு / சமையல் குறிப்பு / சங்கராந்திரி ஸ்பெஷல் 1

Photo of Sangaranthi special 1 by sudha rani at BetterButter
493
0
0.0(0)
0

சங்கராந்திரி ஸ்பெஷல் 1

Jan-14-2019
sudha rani
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சங்கராந்திரி ஸ்பெஷல் 1 செய்முறை பற்றி

சங்கராந்தி அன்று மதியம் சீக்கிரம் செய்ய உதவும் உணவுகள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சாதம் வடிக்க:
  2. அரிசி 1 கப்
  3. நெய் பருப்பு:
  4. துவரம் பருப்பு 1 கப்
  5. நெய் 4 டேபிள்ஸ்பூன்
  6. வரமிளகாய் 4
  7. பூண்டு 4 பல்
  8. கடுகு 1 ஸ்பூன்
  9. சீரகம் 1 ஸ்பூன்
  10. பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
  11. வெங்காயம் 2
  12. தக்காளி 4
  13. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  14. நல்லெண்ணெய் 2 ஸ்பூன்
  15. கேசடி:
  16. ரவை 1 கப்
  17. தண்ணீர் 3 கப்
  18. சர்க்கரை 2 கப்
  19. கலர் சிறிது
  20. ஏலக்காய் 4
  21. முந்திரி சிறிது
  22. நெய் 4 டேபிள்ஸ்பூன்
  23. எண்ணெய் 1/4 கப்
  24. பாயசம்:
  25. ஜவ்வரிசி 1 கப்
  26. தண்ணீர் 3 கப்
  27. பால் 1 கப்
  28. சர்க்கரை 2 கப்
  29. ஏலக்காய்த்தூள் 1/2 ஸ்பூன்
  30. உளுந்து வடை:
  31. உளுந்து 1 கப்
  32. வெங்காயம் 2
  33. பச்சை மிளகாய் 3
  34. கறிவேப்பிலை சிறிது
  35. கொத்தமல்லி தழை சிறிது
  36. உப்பு தேவையான அளவு
  37. எண்ணெய் பொரிப்பதற்கு
  38. பொரியல்:
  39. வெண்டைக்காய் 1/2 கிலோ
  40. வரமிளகாய் 4
  41. வெங்காயம் 2
  42. உப்பு தேவையான அளவு
  43. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  44. எண்ணெய் 6 டேபிள்ஸ்பூன்
  45. கடுகு 1 ஸ்பூன்
  46. கறிவேப்பிலை சிறிது
  47. கொத்தமல்லி தழை சிறிது

வழிமுறைகள்

  1. சாதம்:
  2. அரிசியை 20 நிமிடங்கள் வரை ஊறவிட்டு பின் கழிந்து குக்கரில் 2 விசில் வந்ததும் இறக்கவும்
  3. நெய் பருப்பு:
  4. குக்கரில் துவரம் பருப்பு பூண்டு தக்காளி மஞ்சள் தூள் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 2 விசில் வந்ததும் இறக்கவும்
  5. பின் வாணலியில் நெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் கறிவேப்பிலை வரமிளகாய் சேர்த்து தாளித்து வெங்காயம் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்
  6. பின் வேகவைத்த பருப்பு சேர்த்து உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு மல்லித்தழை தூவி இறக்கவும்
  7. கேசரி:
  8. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  9. கொதி வரும் போது ஏலக்காய்த்தூள் மற்றும் சர்க்கரை கலர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  10. பின் ரவையை சேர்த்து நன்கு கிளறவும்
  11. 2 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் முந்திரி வறுத்து போடவும்
  12. பின் மீதி உள்ள நெய்யை சூடாக்கி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்
  13. வடை:
  14. உளுந்தை ஒரு 1/2 மணி நேரம் வரை ஊறவிடவும்
  15. பின் தண்ணீர் வடிகட்டி விட்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்
  16. பின் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  17. பின் சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  18. பொரியல்:
  19. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை வரமிளகாய் சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  20. பின் நறுக்கிய வெண்டைக்காய் மற்றும் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  21. நன்கு குழகுழப்பு நீங்கி வதங்கியதும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
  22. பாயசம்:
  23. குக்கரில் ஜவ்வரிசி மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து 2 விசில் வந்ததும் இறக்கவும்
  24. பின் சர்க்கரை மற்றும் பால் விட்டு நன்கு கலந்து கொதிக்கவிடவும்
  25. பின் ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்