வீடு / சமையல் குறிப்பு / சாம்பார் வடை

Photo of Sambar vad by sudha rani at BetterButter
386
0
0.0(0)
0

சாம்பார் வடை

Jan-15-2019
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சாம்பார் வடை செய்முறை பற்றி

விருந்துல மட்டும் இல்லாம வீட்டில் வடை செய்யும் போது வெறுமனே சாப்பிடாமல் இந்த மாதிரி செய்து சாப்பிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வடை:
  2. உளுந்து 1 கப்
  3. பச்சை மிளகாய் 3
  4. வெங்காயம் 2
  5. கறிவேப்பிலை சிறிது
  6. கொத்தமல்லி தழை சிறிது
  7. உப்பு தேவையான அளவு
  8. இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
  9. எண்ணெய் பொரிப்பதற்கு
  10. சாம்பார்:
  11. துவரம் பருப்பு 150 கிராம்
  12. வெங்காயம் 1
  13. தக்காளி 4
  14. உப்பு தேவையான அளவு
  15. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  16. சாம்பார் பொடி 2 ஸ்பூன்
  17. மல்லித்தூள் 1/2 ஸ்பூன்
  18. சீரகத்தூள் 1/2 ஸ்பூன்
  19. பூண்டு 5 பல்
  20. கடுகு 1 ஸ்பூன்
  21. எண்ணெய் சிறிது
  22. மேல தூவ:
  23. துருவிய கேரட் 2 ஸ்பூன்
  24. நறுக்கிய வெங்காயம் 1/4 கப்
  25. கொத்தமல்லி தழை சிறிது
  26. ஓமப்பொடி 1/4 கப்

வழிமுறைகள்

  1. வடை:
  2. உளுந்தை ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
  3. பின் தண்ணீரை வடிகட்டி பச்சை மிளகாயை சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்
  4. பின் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை இஞ்சி பூண்டு விழுது கொத்தமல்லி தழை உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  5. பின் சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  6. சாம்பார்:
  7. துவரம் பருப்புடன் மஞ்சள் தூள் தக்காளி பூண்டு எண்ணெய் சேர்த்து குக்கரில் வைத்து 2 விசில் வந்ததும் இறக்கவும்
  8. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  9. பின் தூள் வகைகள் சேர்த்து வதக்கவும்
  10. பின் வேகவைத்த பருப்பு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்
  11. நன்கு கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
  12. வடையை தனித்தனி கிண்ணங்களில் அடுக்கி அதன் மேல் சாம்பார் ஊற்றி 1/2 மணி நேரம் வரை ஊறவிடவும்
  13. பின் நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி தழை துருவிய கேரட் ஓமப்பொடி சேர்த்து பரிமாறவும்
  14. எப்போதுமே பரிமாறும் போது மேல தூவி கொடுத்தால் தான் மொறுமொறுப்பாக இருக்கும்
  15. முலலிலே தூவினால் நமத்து போகும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்