வீடு / சமையல் குறிப்பு / மீன் கட்லட்

Photo of Fish cutlet by Rabia Hamnah at BetterButter
678
0
0.0(0)
0

மீன் கட்லட்

Jan-15-2019
Rabia Hamnah
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மீன் கட்லட் செய்முறை பற்றி

பார்ட்டிக்கு இப்படி செஞ்சி பாருங்க

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வஞ்சிர மீன்-8துண்டுகள்
  2. உருளைக்கிழங்கு -3
  3. வெங்காயம்-2
  4. பச்சை மிளகாய்-2
  5. கறிவேப்பிலை -1கொத்து
  6. மல்லி இலை
  7. மிளகாய் தூள்-2ஸ்பூன்
  8. மஞ்சள் தூள்-1ஸ்பூன்
  9. இஞ்சி பூண்டு விழுது-1ஸ்பூன்
  10. உப்பு
  11. பிரட் தூள்-1கப்
  12. முட்டை-1-2

வழிமுறைகள்

  1. மீனுடன் உப்பு, மஞ்சள் தூள், 1டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து 5நிமிடம் வேக வைத்து முள்ளை அகற்றி உதிர்த்து வைக்கவும்.
  2. உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து கொள்ளவும்.
  3. வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும்
  4. பின்பு ஒரு பாத்திரத்தில் உதிர்த்த மீன், வேக வைத்த கிழங்கு, நறுக்கிய வெங்காயம், மிளகாய் கறிவேப்பிலை, மல்லி இலை சேர்க்கவும்.
  5. பின்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிசைந்து வைக்கவும்.
  6. முட்டையுடன் சிறிது உப்பு மிளகுத்தூள் சேர்த்து அடித்து வைக்கவும்.
  7. பிரட் தூளை தட்டில் பரத்தி வைக்கவும்.
  8. பின் பிசைந்த கலவையில் சிறிது எடுத்து வட்டமாகவோ, உருளையாகவோ தட்டி முட்டையில் முக்கி பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.
  9. சுவையான மீன் கட்லட் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்