வீடு / சமையல் குறிப்பு / கோபி பரோட்டா

Photo of Gobi parotta by sudha rani at BetterButter
218
0
0.0(0)
0

கோபி பரோட்டா

Jan-15-2019
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கோபி பரோட்டா செய்முறை பற்றி

மைதா இல்லாத பரோட்டா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மேல் மாவு:
  2. கோதுமை மாவு 1 கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. நெய் 2 ஸ்பூன்
  5. எண்ணெய் தேவையான அளவு
  6. பூரணம்:
  7. துருவிய பூக்கோஸ் 1 கப்
  8. வெங்காயம் 2
  9. தக்காளி 1
  10. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  11. கரம் மசாலா தூள் 1 ஸ்பூன்
  12. மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
  13. மல்லித்தூள் 1 ஸ்பூன்
  14. சீரகத்தூள் 1/2 ஸ்பூன்
  15. பெருங்காயத்தூள் 1 சிட்டிகை
  16. சோம்பு தூள் 1/4 ஸ்பூன்
  17. உப்பு தேவையான அளவு
  18. எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மேல் மாவு:
  2. கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து கலந்து நெய் விட்டு பிசிறி பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொண்டு எண்ணெய் விட்டு ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
  3. பூரணம்:
  4. பூக்கோஸை சின்ன சின்ன பூவாக கட் செய்து கொதிக்கும் நீரில் மஞ்சள் தூள் சேர்த்து அதில் பூக்கோஸை சேர்த்து சிறிது நேரம் கொதித்ததும் இறக்கி வடிகட்டி 2_3 முறை அலசி வைக்கவும்
  5. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும்
  6. பின் பூக்கோஸ் மற்றும் தூள் வகைகள் சேர்த்து நன்கு வதக்கவும்
  7. நன்கு சுருண்டு வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
  8. பூக்கோஸ் சுத்தம் செய்து அலசி அதில் உள்ள ஈரப்பதமே போதுமானது
  9. பரோட்டா செய் முறை:
  10. மாவை உருண்டை பிடித்து பின் சப்பாத்தி போல் திரட்டவும்
  11. பின் நடுவில் பூக்கோஸ் மசாலா வைக்கவும்
  12. பின் அதை மடித்து மீண்டும் லேசாக திரட்டி வைக்கவும்
  13. பின் சூடான தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் திருப்பி விட்டு சுட்டெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்